For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எனக்காக போராட்டம் நடத்தியதற்கு நன்றி.. வைகோவை நேரில் சந்தித்தார் 'நக்கீரன்' கோபால்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நேரில் சந்தித்து நக்கீரன் ஆசிரியர் கோபால் நன்றி தெரிவித்தார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பத்திரிகைகள் கிட்ட நெருங்காதே..வைகோ- வீடியோ

    சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நேரில் சந்தித்து நக்கீரன் ஆசிரியர் கோபால் நன்றி தெரிவித்தார்.

    ஆளுநர் குறித்து கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட செய்திக்காக நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் நேற்று அதிகாலை சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

    Nakkeehran Editor Gopal met Vaiko and thanked him

    அவர் மீது தேசத்துரோக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் நக்கீரன் ஆசிரியர் வைகோவை சிறையிலடைக்க மறுப்புத் தெரிவித்து விடுதலை செய்தது.

    நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு ஆதரவாக ஊடகத்துறையினர் போராட்டத்தில் குதித்தனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கோபால் கைதுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

    அப்போது நக்கீரன் கோபாலை சந்திக்க வைகோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையம் முன்புபோராட்டம் தர்ணாவில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து வைகோ கைது செய்யப்பட்டு நேற்று மாலை விடுவிக்கப்பட்டார்.

    [ பத்திரிகைகள் கிட்ட நெருங்காதே.. வைகோ போட்ட பொளேர்! ]

    தனக்காக கைதான வைகோவுக்கு நேற்றே ஊடகங்கள் வாயிலாக நன்றி தெரிவித்த நக்கீரன் கோபால், இன்று வைகோவை நேரில் சந்தித்து நன்றி கூறினார். நேற்று தான் கைதானபோது தன்னை பார்க்க வந்ததை அறிந்ததும் நம்பிக்கை வந்தது என்றும் நக்கீரன் கோபால் தெரிவித்தார்.

    English summary
    Nakkeehran Editor Gopal has met MDMK general secretary Vaiko today and thanked him. Vaiko was arrested for protesting to meet Nakkheeran.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X