For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இதுக்கு நக்கீரன் கோபாலை கைது செய்யாமலே இருந்திருக்கலாம்.. இப்போ நிலைமையை பாருங்க

Google Oneindia Tamil News

Recommended Video

    நக்கீரன் கோபாலை கைது செய்ததால் பிரபலமான கட்டுரை- வீடியோ

    சென்னை: ஆளுநர் குறித்து அவதூறு கட்டுரை வெளியிட்டதாக கடந்த செவ்வாய்க்கிழமை, நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபாலை போலீசார் கைது செய்தனர். அவர் மீது தேச துரோக வழக்கு பாய்ந்தது.

    இந்த வழக்கை ரத்து செய்த நீதிமன்றம், கோபாலை விடுதலை செய்ய அதிரடி உத்தரவு பிறப்பித்தது. காலையில் கைதான கோபால், மாலையில் ரிலீசாகி வெளியே வந்தார்.

    ஆனால், அதன்பிறகுதான் டேமேஜ் என்னவோ ரொம்ப அதிகமாகியுள்ளது.

    [ஆடு பாம்பே.. அட ஓடு பாம்பே.. நடுரோட்டில் ராத்திரியில் வாக்கிங் போன மலைப் பாம்பு!]

    நாடே விவாதித்தது

    நாடே விவாதித்தது

    மக்கள் எல்லோரும் அது என்ன கட்டுரை என்ற ஆர்வத்திற்கு சென்றுள்ளனர் என்பது கண்கூடாக தெரிகிறது. தேசிய ஊடகங்களும் கூட இது என்ன மாதிரி கட்டுரை என்பதை விவாதித்தன. அவ்வளவு ஏன், அமெரிக்காவின் முன்னணி நாளிதழ் இதுதொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது.

    ஜனநாயக நாடு

    ஜனநாயக நாடு

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்கிறார்கள், ஆனால், அங்கு பத்திரிகை ஆசிரியர் கைது செய்யப்படுகிறாரே என்ற கேள்வி அமெரிக்கர்கள் மனதிலும் எழ ஆரம்பித்துள்ளது.

    வாட்ஸ்அப்பில் கட்டுரை

    வாட்ஸ்அப்பில் கட்டுரை

    இந்த நிலையில், ஆளுநர் தொடர்பாக நக்கீரனில் வெளியான கட்டுரை, வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்கள் வழியாக மாநிலத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் வேகமாக பரவி வருகிறது. இந்த கட்டுரைக்காகத்தான், நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார் என்ற அறிமுகத்தோடு, அந்த கட்டுரை சுற்றி வருகிறது.

    மூலை முடுக்கு

    மூலை முடுக்கு

    இந்த கட்டுரை வந்த விவகாரம் பெரும்பாலான தமிழக மக்களுக்கு கூட தெரியாமல்தான் இருந்தது. ஆனால் இன்று சமூக வலைத்தளங்கள் வழியாக இந்த கட்டுரை பரவுகிறது. இந்த கட்டுரை தவறு என்றால், இப்படி சமூக வலைத்தளங்களில் அது பரவுவதை தடுக்கவும் காவல்துறை நடவடிக்கை எடுப்பதை போல தெரியவில்லை. ஆனால், கட்டுரை என்னவோ வெகுஜன மக்களை சென்று சேர்ந்தபடி உள்ளது.

    English summary
    Nakkeeran article regarding Governor Banwarilal Purohit spread in whatsapp like wild fire.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X