For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'பூனைக்கு மணி கட்டிய நக்கீரன்'.. வெளியானது நக்கீரன் கோபால் ரிமாண்ட் ரிப்போர்ட்!

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டது தொடர்பான ரிமாண்ட் ரிப்போர்ட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டது ஏன் ? வெளியானது ரிமாண்ட் ரிப்போர்ட்- வீடியோ

    சென்னை: நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டது தொடர்பான ரிமாண்ட் ரிப்போர்ட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகை பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக, ஆளுநரின் தனி செயலாளர் அளித்த புகாரின் பேரில் நக்கீரன் ஆசிரியர் கோபால் இன்று கைது செய்யப்பட்டார்.

    புனே செல்ல இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த நக்கீரன் ஆசிரியர் கோபாலை காவல் உதவி ஆணையர் விஜயகுமார் விசாரித்தார். காலை 7 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம் நடந்த விசாரணைக்கு பின் கோபாலை காவல்துறையினர் கைது செய்தனர்.

    நீதிமன்றத்தில் ஆஜர்

    நீதிமன்றத்தில் ஆஜர்

    இதனையடுத்து நக்கீரன் கோபால் மீது சென்னை ஜாம்பஜார் காவல் நிலையத்தில் 124-A பிரிவில் தேசத் துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நக்கீரன் கோபால் எழும்பூர் 13வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

    ரிமாண்ட் ரிப்போர்ட் தாக்கல்

    ரிமாண்ட் ரிப்போர்ட் தாக்கல்

    இதைத்தொடர்ந்து நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டது தொடர்பான ரிமாண்ட் ரிப்போர்ட்டை ஜாம்பஜார் காவல் ஆய்வாளர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் ஆளுநரின் துணைச்செயலாளர் செங்கோட்டையன் கொடுத்த புகாரில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பூனைக்கு மணி கட்டிய நக்கீரன்

    பூனைக்கு மணி கட்டிய நக்கீரன்

    ஏப்ரல் 20-22, 2018 நக்கீரன் வார இதழின் அட்டைப்படத்தில் பூனைக்கு மணி கட்டிய நக்கீரன் பொறியில் சிக்கிய கவர்னர் சிறையில் நிர்மலாவுக்கு ஆபத்து என்ற வாசகத்துடன் தமிழக ஆளுநர் புகைப்படத்தை அச்சிட்டுள்ளார்கள். மேலும் இது சம்பந்தமான விரிவான கட்டுரை செய்தி வெளியிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தலைவர்கள் வலியுறுத்தல்

    தலைவர்கள் வலியுறுத்தல்

    ரிமாண்ட் ரிப்போர்ட்டின் ஒரு பக்கம் மட்டுமே ஊடகத்தினருக்கு தரப்பட்டுள்ளது. இதனிடையே நக்கீரன் கோபாலை உடனடியாக விடுவிக்குமாறு அனைத்து அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

    English summary
    Nakkheeran Gopal remand report has been submitted in the court. Nakkheeran Chief Editor has been arrested in the morning at Chenai airport.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X