For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் என்ன செய்வீர்கள்?- மனம் திறந்த நளினி

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

வேலூர்: சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் என் மகளுடன் வசிப்பேன் என ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி பேட்டி அளித்துள்ளார்.

1992-ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்துக்கு வந்த ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இவர்கள் சிறையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளனர். இவர்களை விடுவிக்க தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியும் அவர்களை மத்திய அரசு விடுதலை செய்ய மறுத்துவிட்டது.

பேட்டி

பேட்டி

இதையடுத்து 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என கூறி உச்சநீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துவிட்டது. இந்நிலையில் நளினி நியூஸ் 18 தமிழ்நாடு சேனலுக்கு எழுத்து மூலம் அனுபபிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

நிச்சயம் விடுதலை

நிச்சயம் விடுதலை

அதில் 28 ஆண்டுகளாக சிறை தண்டனையில் இருந்த போது நிகழ்ந்த சம்பவங்களையும் வலிகளையும் மறக்க விரும்புகிறேன். நாங்கள் நிச்சயம் விடுதலை செய்யப்படுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

உதவும்

உதவும்

மாநில அரசின் உரிமை பாதுகாக்கப்பட்டது பெருமையாக உள்ளது. விடுதலை ஆனவுடன் மகளுடன் மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன். மகளின் திருமணத்துக்கு மத்திய- மாநில அரசுகள் உதவும் என நம்பிக்கையும் உள்ளது.

முடிவு

முடிவு

விடுதலைக்கு பிறகு முருகனும் மகளுடன் வசிப்பதையே விரும்புகிறார் என்றார் நளினி. இவர்கள் 7 பேர் விடுதலை குறித்து இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

English summary
Nalini requests Central and State Government for her daughter's marriage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X