For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முரசொலியை யாரும் படிப்பதில்லை.. நமது அம்மா நாளிதழ் படித்தால் பொது அறிவு வளரும்.. ஜெயக்குமார்!

நமது அம்மா நாளிதழ் படித்தால் பொது அறிவு வளரும், என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: நமது அம்மா நாளிதழ் படித்தால் பொது அறிவு வளரும், என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது பெரிய சர்ச்சையாகி உள்ளது. ரஜினி தனது பேச்சில், சோ போன்ற பத்திரிக்கையாளர்கள் தற்போது அதிகம் வேண்டும். பத்திரிக்கை துறை தற்போது சரியாக இல்லை.

முரசொலி வைத்திருந்தால் அவரை திமுககாரர் என்று சொல்லிவிடலாம்,கையில் துக்ளக் வைத்திருந்தால் அவரை அறிவாளி என்று சொல்லிவிடலாம் என்று ரஜினி குறிப்பிட்டார். நடிகர் ரஜினியின் கருத்துக்கு எதிராக இணையத்தில் பலரும் விமர்சனம் வைத்து வருகிறார்கள். இணையத்தில் இதனால் ரஜினி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

நிர்பயா வழக்கு.. குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்ரவரி 1ம் தேதி தூக்கு.. பாட்டியாலா நீதிமன்றம் அதிரடி! நிர்பயா வழக்கு.. குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்ரவரி 1ம் தேதி தூக்கு.. பாட்டியாலா நீதிமன்றம் அதிரடி!

என்ன பதில்

என்ன பதில்

இந்த நிலையில் ரஜினியின் கருத்துக்கு அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார். அதில், எம்ஜிஆர் நிறைய சாதனைகளை செய்துள்ளார். தமிழக அரசியலை அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர் எம்ஜிஆர். அவர் ஆட்சியில் இருந்த போது, திமுகவால் ஆட்சியை பிடிக்கவே முடியவில்லை.

ஜெயக்குமார் கருது

ஜெயக்குமார் கருது

தமிழகத்தில் கண்டிப்பாக நகராட்சி, மாநகராட்சி தேர்தல் நடக்கும். அதில் எந்த மாற்றமும் கிடையாது. நாங்கள் உறுதி அளித்தது போல தேர்தல் நடக்கும். இதில் அதிக மேயர் பதவிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றும்.

முரசொலி கருத்து

முரசொலி கருத்து

முரசொலி இதழை திமுகவினரே படிப்பது கிடையாது. இது திமுகவினருக்கும் தெரியும். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியே இதை தமிழருவி மணியனிடம் குறிப்பிட்டு இருக்கிறார். அதைத்தான் தற்போது ரஜினியும் குறிப்பிட்டுள்ளார்.

நமது அம்மா

நமது அம்மா

ஆனால் நமது அம்மா நாளிதழ் அப்படி கிடையாது. அது மிகவும் நல்ல இதழ். நிறைய செய்திகள் அதில் வருகிறது . மக்கள் அதை விரும்பி படிக்கிறார்கள். நமது அம்மா நாளிதழ் படித்தால் பொது அறிவு வளரும், என்று ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Namadhu Amma will increase general knowledge says Jayakumar replying to Rajinikanth's speech about Murasoli.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X