For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உடல் அடக்கம்

By Mathi
Google Oneindia Tamil News

கடவூர்: இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் உடல் இன்று கரூர் அருகே அடக்கம் செய்யப்பட்டது.

கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் வானகம் என்ற இடத்தில் உள்ள நம்மாழ்வாரின் கனவு பல்கலைக்கழக வளாகத்திலேயே பொதுமக்கள் பார்வைக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது.

Nammalvar

பள்ளிப்படை முறை

இன்று காலை நம்மாழ்வாரின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் முதலில் திருநீரு, உப்பு, மிளகு, சங்குக்காய், ஜடாமஞ்ஜி, வெட்டிவேர், சுக்கு, திப்பிலி, பஞ்சகவ்யம், நவதானியம், வில்வ இலைகள், துளசி இலைகள், தர்பைப் புல் ஆகியவை அடுக்கப்பட்டன. அதன் மீது நம்மாழ்வாரின் உடல் வைக்கப்பட்டு, மீண்டும் அந்த பொருட்கள் அவரது உடல் மீது அடுக்கப்பட்டன. இம்முறையை பள்ளிப்படை என்று அழைக்கிறார்கள். இந்த முறையில் உப்பு, மிளகு போடுவதால் நம்மாழ்வாரின் உடல் பதப்படுத்தப்படும். அவரது உடல் மக்காது.

உறவினர்கள் எதிர்ப்பு

ஆனால் இந்த முறைக்கு அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நம்மாழ்வார், இயற்கையோடு வாழ்ந்தவர். மண்ணோடு மண்ணாக வேண்டும் என்பதே அவரது கொள்கை. எனவே, அவரது உடலை மண்ணோடு மண்ணாக இயற்கையோடு ஒன்ற வேண்டும் என்று விரும்பினர். அதற்கு அடக்கத்துக்கு ஏற்பாடு செய்திருந்தவர்களும் ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து, குழியில் போடப்பட்டிருந்த மருத்துவ பொருட்களை அனைத்தும் எடுக்கப்பட்டது. திருநீறு மட்டும் போடப்பட்டு, அவரது உடல் வைக்கப்பட்டது. இறுதிச் சடங்குக்கு வந்த அனைவரும் ஒரு கைப்பிடி மணல் போட்டு தங்களது அஞ்சலியை செலுத்தினர். இயற்கைக்காக வாழ்ந்த நம்மாழ்வாழ்வாரின் இறுதிச் சடங்குகள் நடந்து முடிந்தன.

நம்மாழ்வாரின் இறுதிச் சடங்கில் நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்த் தேச பொதுவுடைமைக் கட்சித் தலைவர் மணியரசன், எம்எல்ஏ உ. தனியரசு, நடிகை ரோகிணி உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

English summary
Nammalvar, who passed away near Tanjore, buried in his farm estate at Vanagam, near Karur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X