For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாம் தமிழர் கட்சிக்கு ஏன் இந்த சறுக்கல்.. புயல் கிளப்ப தவறியது ஏன்.. என்ன நடந்தது?

இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி கடுமையான தோல்வியை சந்தித்துள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    TamilNadu By election 2019 | விக்கிரவாண்டி, நாங்குநேரியில் நாம் தமிழர் வீழ்ச்சிக்கு காரணம் என்ன?

    சென்னை: தமிழக சட்டசபை இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வழக்கமான வாக்குகளை பெறாமல் போனது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

    கடந்த முறை எம்பி தேர்தலை போலவே, இந்த முறையும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட கட்சி நாம் தமிழர். வேலூரில் எப்படி அதிமுக - திமுக என்ற இரு ஜாம்பவான்களுக்கு இடையே புகுந்து தில்லென போட்டியிட்டதோ, அப்படித்தான் இந்த முறையும் இடைத்தேர்தலை சந்தித்தது.

    போன முறை போலவே, இந்த முறையும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என்பதால், இந்த தரப்பின் இளைஞர்கள் வாக்குகள் எப்படியும் சீமானுக்குதான் செல்லும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், ஹரி நாடார் என்ற சுயேச்சையை விட, சீமான் வேட்பாளர் குறைந்த வாக்குகளை பெற்றுள்ளது ஆச்சரியமாக உள்ளது.

    பொன்முடி மீது கோபத்தை கக்கும் உடன்பிறப்புகள்... இடைத்தேர்தல் தோல்வி எதிரொலிபொன்முடி மீது கோபத்தை கக்கும் உடன்பிறப்புகள்... இடைத்தேர்தல் தோல்வி எதிரொலி

    சீமான்

    சீமான்

    எம்பி தேர்தலில் 3-வது இடத்தை பிடித்த கட்சியான நாம் தமிழரின் இந்த சறுக்கலுக்கு என்ன காரணம்? ஹரி நாடார் 749 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கிறார் என்றால், சீமான் தரப்பில் மக்கள் ஏதேனும் அதிருப்தியில் உள்ளனரா என்று தெரியவில்லை. இத்தனைக்கும் ஹரி நாடார் ஒன்றும் பெரிய பிரபலம் என்று சொல்லிவிட முடியாது. அந்த தொகுதியில் அவருக்கு ஆதரவு உள்ளது.

    ராக்கெட் ராஜா

    ராக்கெட் ராஜா

    சசிகலா புஷ்பாவை அதிமுகவில் இருந்து நீக்கிய பிறகு அவருக்கு ஆதரவாக நிற்க ஆரம்பித்தார். அப்போதுதான் இவரது முகம் தமிழகம் அறிய தொடங்கியது. பின்னர், ராக்கெட் ராஜா, சுபாஷ் பண்ணையார் பனங்காட்டுப் படை கட்சி என்ற அமைப்பை உருவாக்கவும் இன்னும் கொஞ்சம் பிரபலம் ஆனார். ஆனால் இப்படிதிடீரென இந்த நாங்குநேரி தேர்தலை சந்திப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. முழுக்க முழுக்க நாடார் சமுதாய மக்களின் வாக்குகளை நம்பி மட்டுமே போட்டியிட்டதாலோ என்னவோ, அவருக்கு, 4243 வாக்குகள் கிடைத்தன.

    வாக்குகள்

    வாக்குகள்

    ஆனால், சீமான் கட்சிக்கு இதைவிட குறைவான வாக்குபதிவே விழுந்துள்ளது. சீமான் வழக்கமாக சொல்வதைபோல, பணம் இந்த தேர்தலிலும் விளையாடி உள்ளது, பணம் கொடுத்து வாக்குகளை பெற்றுள்ளனர்.. என்று கூட இதை எடுத்து கொண்டாலும், இளைஞர்களை அப்படி நினைத்துவிட முடியாது.

    மக்கள் நீதி மய்யம்

    மக்கள் நீதி மய்யம்

    அதிமுக, திமுக கட்சிக்காரர்களின் ஓட்டுக்கள் ஒருபக்கம் போனாலும், மற்ற தரப்பினர் ஓட்டுக்கள் ஏன் சீமானுக்கு விழவில்லை? மநீம ஓட்டுக்கள் யாருக்கு போயின? இளைஞர்களை கவரும் வகையில் சீமான் இன்னும் செயல்பட வேண்டி உள்ளதா? என்று தெரியவில்லை. அல்லது அவரது பேச்சுக்களே அவருக்கு பாதகமாக போய் விட்டதா என்றும் தெரியவில்லை.

    ராஜீவ் காந்தி

    ராஜீவ் காந்தி

    அனைவரையும் ஈர்த்து வரும் சீமானின் அனல் கக்கும் பிரச்சாரம் இந்த முறை எல்லைமீறி விட்டதோ, புதைந்து போன ராஜீவ் காந்தி விவகாரத்தை பேசி, இருக்கும் பெயரையும் தானே கெடுத்து கொண்டாரோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. கடிவாளமிட்டு பேச வேண்டும் என்பதை டிடிவி தினகரன் உட்பட பலரும் சீமானை உரிமையாகவே கேட்டுக் கொண்டிருந்ததையும் மறுக்க முடியாது. ஆக்கப்பூர்வமாக அவர் எடுத்து வைத்த எத்தனையோ ஆவேச வாதங்களை தமிழகமே வியந்து பார்த்தது.

    அசால்ட்

    அசால்ட்

    ஆனால் ராஜீவ் காந்தி குறித்த கோபாவேசத்தை மக்கள் விரும்பவில்லை என்பதையே இந்த வாக்குகள் உணர்த்துகின்றன. எத்தனையோ களப்பணிகளை கையில் எடுத்து, சாமான்ய மக்களின் மனசுக்குள் அசால்ட்டாக நுழைந்த கட்சி நாம் தமிழர்.. மக்களை எப்போதுமே நெருங்கி இருப்பதுதான் இக்கட்சியின் பலமே.. எனினும், அதிமுக, திமுக என்ற மாபெரும் சக்திகளுடன் மோதக்கூடிய அளவுக்கு நாம் தமிழர் கட்சி இன்னும் வளரவில்லை என்பதையே இந்த இடைத்தேர்தல் வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது!

    English summary
    nanguneri and vikkiravandi by election result: what causes the naam tamizhar party to get less votes
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X