For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உச்சநீதிமன்றத் தீர்ப்பை மோடி அரசு அமல்படுத்தும் என்ற நம்பிக்கை மூடநம்பிக்கை ஆனது- நாஞ்சில் சம்பத்

உச்சநீதிமன்றத் தீர்ப்பை மோடி அரசு அமல்படுத்தும் என்ற நம்பிக்கை மூடநம்பிக்கை ஆனது என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: உச்சநீதிமன்றத் தீர்ப்பை மோடி அரசு செயல்படுத்தும் என்ற நம்பிக்கை தற்போது மூடநம்பிக்கையானது என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகம் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறது. இதை மத்தியிலும் எந்த ஆட்சி நடைபெற்றாலும் செயல்படுத்துவதில்லை என்பதுதான் தமிழககத்தின் குற்றச்சாட்டு ஆகும்.

Nanjil Sampath condemns Central government in the issue of cauvery

இந்நிலையில் காவிரி நீர் பகிர்வது குறித்து திட்டத்தை 6 வாரங்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனினும் அதை மத்திய அரசு செயல்படுத்தவில்லை.

இதனால் தமிழகமே கொந்தளிப்பில் உள்ளது. இதுகுறித்து நாஞ்சில் சம்பத் தனது டுவிட்டரில் பதிவில் கூறுகையில், காவிரி உரிமையில் கைவைத்து விட்டார்கள்;கெடு முடிந்துவிட்டது கேடு சூழ்ந்துவிட்டது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை மோடி அரசு நடைமுறை படுத்தும் என்ற எங்கள் நம்பிக்கை மூடநம்பிக்கை ஆகிவிட்டது.
இந்தியா என்பது பொய்யோ?இந்தியன் என்பது மாயையோ? என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

English summary
Nanjil Sampath condemns that the belief of Central Government would have constitute Cauvery Management board becomes wrong belief.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X