For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடக தேர்தல் முடியும் வரை காவரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது- நாஞ்சில் சம்பத்

கர்நாடக தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: கர்நாடக தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது என்று அண்மையில் டிடிவி தினகரன் அணியிலிருந்து விலகிய நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு ஜெயலலிதாவை சந்தித்த நாஞ்சில் சம்பத் மதிமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். பின்னர் அங்கு அவருக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

Nanjil Sampath says that Cauvery Management board will not constitute

இந்நிலையில் ஜெயலலிதா மறைந்தவுடன் சசிகலாவின் தலைமையை ஏற்க விரும்பாமல் விலகுவதாக அறிவித்தார். பின்னர் அடுத்த நாளே சசிகலாவை ஆஹா ஓஹோ என புகழ்ந்து அவருக்கு ஆதரவு தெரிவித்தார்.

டிடிவி தினகரன் பக்கம் இருந்த நாஞ்சில் சம்பத் அவர் தொடங்கிய அரசியல் அமைப்பின் பெயர் பிடிக்கவில்லை என்று கூறி அந்த அணியிலிருந்து விலகியதோடு அரசியலுக்கே முழுக்கு போட்டார்.

இந்நிலையில் அவர் மாற்று கட்சியில் இணைவார் என்று சமூகவலைதளங்களில் பரவின. இந்த கேள்வியை செய்தியாளர்களும் கேட்டனர்.

அப்போது சம்பத் கூறுகையில் எந்த கொடியையும் ஏந்த மாட்டேன். எந்த தலைவர் நிழலிலும் ஒதுங்க மாட்டேன். கர்நாடக தேர்தல் முடியும் வரை மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது என்றார் நாஞ்சில் சம்பத்.

English summary
Nanjil Sampath says that Centre should not constitute Cauvery Management Board till the Karnataka Assembly election over.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X