For Daily Alerts
Just In
அவங்க செய்த "உடற்பயிற்சி".. திருச்சி சிவா, சசிகலா புஷ்பாவை வாரிய நாஞ்சில் சம்பத்!
மதுரை: சில நாட்களுக்கு முன்பே இரண்டு பேர் உடற்பயிற்சி செய்யும் படத்தை சிலர் என்னிடம் காட்டினார்கள். அப்போதே அம்மா உரிய நடவடிக்கையை எடுத்து விட்டார். ஆனால் தற்போது திமுகவுடன் சேர்ந்து கொண்டு கழகத்தைக் காட்டி கொடுத்து விட்டார் சசிகலா புஷ்பா என்று நாஞ்சில் சம்பத் காட்டமாக கூறியுள்ளார்.
மதுரையில் நடந்த அதிமுக பட்ஜெட் விளக்கப் பொதுக் கூட்டத்தில் பேசும்போது இவ்வாறு பேசினார் சம்பத். அவர் தனது பேச்சின்போது பட்ஜெட் குறித்து கொஞ்சமாக பேசினார். சசிகலா புஷ்பாவைத்தான் நிறைய வாரினார்.

சம்பத்தின் பேச்சிலிருந்து சில துளிகள்...
- சில நாட்களுக்கு முன் வாட்ஸ் அப்பில் இரண்டு பேர் உடற்பயிற்சி செய்கிற படம் வந்ததை சிலர், என்னிடம் காட்டினார்கள்.
- அப்போதே அம்மா அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து விட்டார்.
- தற்போது சசிகலா புஷ்பா, தி.மு.க.வினரோடு சேர்ந்து திட்டமிட்டு கழகத்தை காட்டிக் கொடுக்கும் துரோகத்தை செய்திருக்கிறார்.
- ஆனால் சசிகலா புஷ்பாவால் நமது கழகத்தை ஒன்றும் செய்ய முடியாது.
- திருச்சி சிவாவுடன் அவர் நடந்து கொண்ட விதத்தால், அம்மாவை குறை சொல்ல அவருக்கென்ன தகுதி இருக்கு?
- சசிகலா புஷ்பாவுக்கு பதவிகள் கொடுத்து அழகு பார்த்தவர் அம்மா.
- சசிகலா புஷ்பாவை நீக்கியதற்கு நம் அம்மா பதில் சொல்லணும்னு ஸ்டாலின் சொல்றது வேடிக்கையாக இருக்கு.