For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவல்துறையை வேறு யாரிடமாவது புதுவை முதல்வர் ஒப்படைக்க வேண்டும் - அதிமுக வலியுறுத்தல் - வீடியோ

புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி தன்னிடம் இருக்கும் காவல்துறையை வேறு அமைச்சர்களிடம் ஒப்படைத்தால்தான் புதுச்சேரியில் குற்றங்கள் குறையும் என அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் கூறியுள்ளார்.

By Suganthi
Google Oneindia Tamil News

புதுச்சேரி: முதலமைச்சர் நாராயணசாமி தம்மிடம் உள்ள காவல்துறை பொறுப்பை மற்ற அமைச்சர்களிடம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் குற்றங்கள் குறையும் என அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் கடந்த மாதத்துக்குள் 10 கொலைகளுக்கும் மேல் நடந்துள்ளது. அதில் என்.ஆர் கங்கிரஸ் பிரமுகர் வேலழகன் நாட்டுவெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார்.

 Narayanasamy Has to hand over police department to somebody told MLA Anbazhagan

வில்லியனூர் பாஜக இளஞரணி தலைவர் ஜெகன் அரிவாளால் வெட்டிக் கொடூரமாக கொல்லப்பட்டார். அதையடுத்து புதுச்சேரி பாஜக தலைவர் சுவாமிநாதன் குண்டர் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என கூறினார்.

அதையடுத்து, புதுச்சேரியில் கொலை,கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவர்களை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி உத்தரவிட்டார்.

இந்நிலையில் புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன், ''புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தன்னிடம் இருக்கும் காவல்துறையை வேறு யாரிடமாவது கொடுக்க வேண்டும். அவருக்கு துணைநிலை ஆளுநர் கிரண் பேடியுடன் போராடுவதற்கே நேரம் சரியாக உள்ளது. ஆகையால் காவல்துறையை மற்றவரிடம் ஒப்படைத்தால் தான் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட முடியும்'' என கூறினார்.

English summary
Chief minister Narayanasamy should hand over police department to some other minister to controll crime in Puducherry told Admk MLA Anbazhagan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X