For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரே மூச்சில் மகாபாரதம் சொன்னது எனக்கே சவாலாகத்தான் இருந்தது!- சிவகுமார்

By Shankar
Google Oneindia Tamil News

சாதனைக்கு வயது ஒரு தடையாக இருப்பதில்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் நடிகர் சிவகுமார்.

திரைத் துறையில் ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தும், தன் இரு மகன்களும் பிஸியாக நடிக்க ஆரம்பித்துவிட்டதால், நடிப்பதை நிறுத்திக் கொண்டவர் சிவகுமார்.

எதிலும் பங்சுவாலிட்டி, சீரான உடற்பயிற்சி, நேர்த்தியான வாழ்க்கை என வாழ்ந்து வரும் அவர், கம்பராமாயணத்தை 2 மணிநேரத்தில் சொற்பொழிவாக நிகழ்த்திக் காட்டினார்.

Narrating Mahabharatham in 2.10 hours is a big challenge, says Sivakumar

இப்போது ராமாயணத்தை விட பெரிய காவியமான மகாபாரதத்தை முழுமையான சொற்பொழிவாக நிகழ்த்தி அசத்தினார். அதுவும் 2.10 மணி நேரத்தில்.

இதுகுறித்து சிவகுமார் கூறுகையில், "ஒரே மூச்சில் 2.10 மணி நேரத்தில் 26-10-15-ந்தேதி ஈரோடு - திண்டல்- வேளாளர் மகளிர் கல்லூரியில் உணர்ச்சிகரமாக பேசி முடித்திருப்பது எனக்கே விடுத்த சவாலாகத்தான் தோன்றுகிறது

2009 -ம் ஆண்டு 100 பாடல்கள் வழி -கையில் எந்தக் குறிப்பும் இல்லாமல்- ஒரு சொட்டு நீர் அருந்தாமல்- இளைய தலைமுறையினர் 8000 பேர் முன்னிலையில்
'கம்பராமாயணம்' - உரை நிகழ்த்தியதை யாரும் எளிதில் செய்ய முடியாது
என்பதைப் போலவே - ராமாயணத்தைவிட கதை அமைப்பில் 4 மடங்கு
பெரியதான - உலக இலக்கியங்களில் பெரியது என்று சொல்லப்படும் -
மகாபாரததின் மொத்தக் கதையையும் 4 ஆண்டுகள் தீவிர ஆய்வு செய்து -பாமரனும் எளிதில் புரிந்து கொள்ளும் எளிய மொழியில். முக்கிய கதாபாத்திரங்களின் வழியாக - ​​ஒரே மூச்சில் 2.10 மணி நேரத்தில் 26-10-15-ந்தேதி ஈரோடு - திண்டல்- வேளாளர் மகளிர் கல்லூரியில் உணர்ச்சிகரமாக பேசி முடித்திருப்பதும் எனக்கே விடுத்த சவாலாகத்தான் தோன்றுகிறது," என்றார்.

English summary
Actor Sivakumar says that his recent Mahabharatham Narration in just 2.10 hours (Sorpozhivu) is a big challenge to himself.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X