For Quick Alerts
For Daily Alerts
கிழிந்து தொங்கிய தேசியக் கொடி.. தலைமைச் செயலகத்தில் பரபரப்பு!

கிழிந்து தொங்கிய தேசியக் கொடி | தோப்பூரில் துணைக்கோள் நகரம்- வீடியோ
சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் கிழிந்த நிலையில் தேசியக் கொடி பறந்து வருகிறது. இதனால் மக்கள் வேதனை தெரிவித்தனர்.
புனித ஜார்ஜ் கோட்டையில் தலைமை செயலகம் அமைந்துள்ளது. இங்கு கொத்தளத்தில் தேசியக் கொடி பறந்து கொண்டிருக்கிறது.

இந்தக் கொடி கிழிந்த நிலையில் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சட்டமன்றக் கூட்டத்தொடர் நடப்பதால் அமைச்சர்கள், அதிகாரிகள் ஏராளமானோர் வருகை தந்துள்ளனர்.
தினமும் அமைச்சர்கள், அதிகாரிகள் வந்த போதிலும் கொடியை மாற்ற நடவடிக்கை இல்லை என்பதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.