For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெல்லை தீக்குளிப்பு சம்பவம்.. தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பரிதாபம்! கந்து வட்டியின் கோரப்பசிக்கு கருகிய உயிர்கள்-வீடியோ

    நெல்லை: ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    நெல்லை ஆட்சியர் அலவலகத்தில் இசக்கி முத்து என்பவர் தனது மனைவி சுப்புலட்சுமி, 5 வயது மகள் மதி சரண்யா மற்றும் 2 வயது குழந்தை அட்சய ப்ரணீதா ஆகியோருடன் நேற்று தீ குளித்தார்.

    National Human Rights Commission has issued notice to the Tamil Nadu government

    இதில் மனைவி சுப்புலட்சுமி மற்றும் 2 குழந்தைகள் ஆகிய 3 பேர் நேற்று உயிரிழந்தனர். படுகாயங்களுடன் இசக்கி முத்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    கந்துவட்டி கொடுமையால் ஆட்சியர் அலுவலகத்தில் கூலித்தொழிலாளி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் வெளியான இந்த வீடியோ காட்சிகளும் பார்ப்போரின் நெஞ்சை உலுக்குவதாக இருந்தது.

    இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கந்துவட்டி கொடுமையால் 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தலைமைச்செயலாளர், டிஜிபி, நெல்லை எஸ்பி 4 வாரத்தில் பதில்தர மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    English summary
    The National Human Rights Commission has issued notice to the Tamil Nadu government on the death of 3 persons in the Collectorate office at Nellai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X