For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சூடு பிடிக்கும் ராமலிங்கம் கொலை வழக்கு.. விசாரணையில் குதித்தது என்ஐஏ படை

ராமலிங்கம் கொலை வழக்கை தேசிய புலனாய்வு துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

Google Oneindia Tamil News

கும்பகோணம்: மதமாற்றத்திற்கு எதிராக போராடிய திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு விசாரணை சூடு பிடித்துள்ளது. இது சம்பந்தமான விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பினர் கையில் எடுத்துள்ளனர்.

கும்பகோணத்தில், மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்த்த திருபுவனத்தை சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் என்பவர் பிப்ரவரி 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நடத்தப்பட்ட இந்த படுகொலை தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனால் படுகொலை நடந்து அடுத்த 2 நாட்களுக்கு பொதுமக்கள் கண்டித்து திருபுவனத்தில் கடையடைப்பும், மறியலும் நடத்தினர். இதனால் பதட்டமான ஒரு சூழல் அப்போது ஏற்பட்டது.

நிழல் கூட ஒழுக்கமானது.. அதனால்தான் அவர் நல்லகண்ணு.. படமாகிறது பெரும் தோழரின் வரலாறு!நிழல் கூட ஒழுக்கமானது.. அதனால்தான் அவர் நல்லகண்ணு.. படமாகிறது பெரும் தோழரின் வரலாறு!

படுகொலை

படுகொலை

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ராமலிங்கம் படுகொலைக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தனர். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று வேண்டுகோளும் விடுத்தனர். இதையடுத்து இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தேசிய புலனாய்வு அமைப்பு

தேசிய புலனாய்வு அமைப்பு

இந்த நிலையில் இந்த கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தவண்ணம் இருந்தது. அதனால் இந்த வழக்கின் விசாரணை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணையை துவங்கி உள்ளனர்.

விசாரணை

விசாரணை

இதற்காக கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ஏஎஸ்பி சவுக்கத் அலி தலைமையிலான 4 பேர்கொண்ட குழுவினர் 4 நாட்களுக்கு முன்பு விரைந்து வந்தனர். விசாரணையையும் துரிதமாக ஆரம்பித்துள்ளனர். அதன்படி முதற்கட்டமாக ராமலிங்கத்தின் மகன், மனைவி விஸ்வாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.

விவரம் கேட்டார்கள்

விவரம் கேட்டார்கள்

இது சம்பந்தமாக ராமலிங்கம் மனைவி சித்ரா செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "என் கணவர் கொலை விஷயமாக அதிகாரிகள் வந்து என்னிடம் பேசினார்கள். கொலை நடந்த விவரம், அது சம்பந்தமாக யாராவது விசாரித்தார்களா என்று கேட்டார்கள். அதற்கு பதில் சொன்னேன்" என்றார்.

English summary
National investigation Agency has started Investigation on Thirubuvanam Ramalingam murder case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X