For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தனுஷ்கோடி அருகே.. 3.5 கிலோ தங்கத்துடன் வந்த இலங்கை படகு.. ஹெலிகாப்டரில் மடக்கிய இந்திய கடற்படை

Google Oneindia Tamil News

Recommended Video

    தனுஷ்கோடி: 3.5 கிலோ தங்கத்துடன் வந்த இலங்கை படகு.. ஹெலிகாப்டரில் மடக்கிய இந்திய கடற்படை - வீடியோ

    சென்னை: இந்திய கடல் பகுதிக்குள் வந்த இலங்கை படகை, இந்திய கடற்படை ஹெலிகாப்டர் வழிமறித்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    கடந்த சில நாட்களாக இலங்கையில் இருந்து தங்கம், இந்தியாவில் இருந்து போதை பொருட்கள் என அதிகளவில் கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்கும் விதமாக இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையில் பாதுகாப்பு பணி தீவிரபடுத்தப்ட்டுள்ளது.

    Naval helicopter from Indian Naval Air Station, Ramnad intercepted a Srilankan boat within Indian waters

    இதனையடுத்து ராமேஸ்வரம் அடுத்து உச்சிப்புளியில் அமைந்துள்ள இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் பருந்து விமானப்படை முகாமிற்கு சொந்தமான ரோந்து ஹெலிகாப்டர் நேற்று காலை இந்திய - இலங்கை சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது இந்திய கடற்பரப்பில் சந்தேகத்திற்க்கு இடமான முறையில் இந்திய விசைபடகுடன் நின்று கொண்டிருந்த இலங்கை படகை நோக்கி ஹெலிகாப்டர் தாழ்வாக சென்றதை கண்ட இந்திய படகு அங்கிருந்த தப்பி சென்றது. ஆனால் இலங்கை படகு அங்கிருந்து தப்ப முடியாமல் இந்திய கடற்படையிடம் சிக்கியது.

    நடுக்கடலில் சிக்கியவர்களை இந்திய கடற்படை வீரர்கள் படகையும் அதில் இருந்த 3 பேரையும் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு செல்லும்படி தெரிவித்தனர். ஆனால் படகில் இருந்தவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள் செல்ல முயன்ற போது இந்திய கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டரை தாழ்வாக செலுத்தி படகையும் அதிலிருந்த மூவரையும் அரிச்சல்முனை கடல் பகுதிக்கு கொண்டு வந்து விட்டனர்.

    மேலும், கைது செய்யப்பட்ட லூவாஸ் அலோசியல, அந்தோனி சுகந்,சகாய வினிஸ்ரோ, ஆகிய மூவரும் இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்தர்கள் இவர்களிடம் உளவுத்துறை மற்றும் தமிழக கடலோர போலிஸ் குழும அதிகாரிகள் நடத்திய விசாரனையில் இவர்கள் முன்னுக்கு பின் முறனாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் நடுக்கடலில் இலங்கை படகுடன் இருந்த ராமேஸ்வரம் விசைபடகை பிடித்து விசாரித்தனர்.

    விசைபடகில் படகில் இருந்த லட்சுமணன்,தியோனியஸ்,சர்வேஸ்வரன் உள்ளிட்ட நான்கு பேரிடம் நடத்திய விசாரனையில் இவர்கள் மூவரும் இலங்கையில் இருந்து தங்க கட்டிகளை கடத்தி வந்து எங்களிடம் கொடுக்கும் போது கடற்படை ஹெலிகாப்ட்டர் வந்ததால் நாங்கள் விசைபடகுடன் தப்பி சென்றதாக கூறினர்.

    இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்பு பிரிவு காவலர்கள் குனனேஸ்வரன்,செந்தில்குமார் ஆகியோர் கொண்ட குழு மீண்டும் இலங்கையை சேர்ந்தவர்களிடம் விசாரனை நடத்தியத்தினர். இலங்கையில் இருந்த 35 தங்க கட்டிகள் கட்டி ஒன்று சுமார் 100 கிராம் வீதம் 3 அரை கிலோ தங்கம் தலைமன்னாரில் இருந்த கடத்தி வந்ததாகவும் கடற்படை கைது செய்ததால் தங்கத்தை படகில் மறைத்து வைத்திருப்பதாகவும் ஒப்புக்கொண்டனர்.

    இதனையடுத்து இலங்கையை சேர்ந்த மூவரை அழைத்து சென்ற போலிஸார் படகில் ரகசிய அறை அமைத்து அதில் பதுக்கி வைத்து இருந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்ப்பட்ட தங்கத்தை ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் போலிஸார் ஒப்படைத்தனர்.பறிமுதல் செய்ப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவத்தால் கடந்த 24 மணி நேரமாக இந்திய-இலங்கை கடத்தல்காரர்கள் நடத்தி வந்த கடத்தல் நாடகம் முடிவுக்கு வந்தது.

    English summary
    Indian Navy: Naval helicopter from Indian Naval Air Station, Ramnad intercepted a Srilankan boat within Indian waters off Dhanushkodi on 15 February. The boat was illegally carrying 3.5 kg of gold which was confiscated; Further investigation underway.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X