For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சசிகலா புஷ்பா ஆவேசமாக பேச... அங்கிட்டும் இங்கிட்டும் நவநீதகிருஷ்ணன் ஓட.. அடடா!

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலா புஷ்பா பேசிய பெரும் பேச்சு ஏற்படுத்திய பிரளயம் ஒரு பக்கம் இருக்க, அவர் பேசப் பேச ராஜ்யசபா அதிமுக குழு தலைவர் நவநீதகிருஷ்ணன் டென்ஷன் ஆன கதையைத்தான் இப்போது சமூக வலைதளங்களில் செமையாக கலாய்த்துக் கொண்டுள்ளனர்.

அதிமுகவினர் யாருமே இப்படி ஒரு டிவிஸ்ட்டை சசிகலா புஷ்பா கொடுப்பார் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஜெயலலிதா என்ற சிங்கத்திற்கு முன்பு இப்படி யாரும் இதுவரை சிலுப்பியதில்லை என்பதால் சசிகலா புஷ்பாவின் கோபாவேச மற்றும் அழுகைப் பேச்சு அதிமுகவினரை அதிர வைத்து விட்டது.

Navaneethakrishnan was the most tensed ADMK MP yesterday!

நாடாளுமன்ற வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் இதுவரை நடைபெற்றதில்லை என்பதால் ஒட்டுமொத்த தேசத்தையும் நேற்று பரபரப்புக்குள்ளாக்கி விட்டது. எல்லோருமே சசிகலாவின் ஆவேசத்தை மட்டுமே பார்த்த நிலையில் பலரின் கண்களுக்கு நவநீதகிருஷ்ணனின் டென்ஷன்தான் பெரிய அளவில் சிரிப்பலையை ஏற்படுத்தி விட்டது.

அதாவது சசிகலா பல்வேறு உணர்ச்சிகளையும் கொட்டிக் கலந்து கொடுத்து பேசிக் கொண்டிருந்தபோது அவரை எப்படித் தடுப்பது என்று தெரியாமல் நேற்று ரொமப்ச் சிரமப்பட்டவர் நவநீதகிருஷ்ணன் மட்டும்தான். ராஜ்யசபா துணைத் தலைவர் குரியன் இருக்கையை நோட்டி தடதடவென ஓடினார். அவரிடம் ஆவேசமாகப் பேசினார்.

பின்னர் மீண்டும் சசிகலாவை நோக்கி ஓடி வந்தார். அவரைப் பார்த்து உட்கார் என்பது போல என்பது கோபமாகப் பேசி கையைக் காட்டினார். பிறகு மீண்டும் குரியனிடம் ஓடினார். இப்படியாக அங்குமிங்குமாக அவர் ஓடியதை பலர் சமூக வலைதளங்களில் கலாய்த்துக் கொண்டுள்ளனர்.

எப்படியாவது சசிகலாவை பேச விடாமல் தடுத்து விட வேண்டும் என்று அவர் டென்ஷனுடன் அங்குமிங்கும் திரிந்தது பெரிய சிரிப்பலையை சமூக வலைதளங்களில் ஏற்படுத்தி விட்டது. சசிகலாவை பேச விட்டு அதனால் தலைமையிடம் தான் வாங்கிக் கட்டிக் கொள்ள நேரிடுமே என்ற அவஸ்தையில்தான் இப்படி நவநீதகிருஷ்ணன் நிலை கொள்ளாமல் தவித்துப் போய் விட்டார் என்றும் பலர் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிக்கல்..!

English summary
ADMK's RS leader Navaneethakrishnan was in high tension yesterday after Sasikala Pushpa went against Jayalalitha in the house.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X