For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக 25, திமுக 11 இடங்களில் வெல்லும்: பாஜக கூட்டணிக்கு வெறும் 3 இடமே!- என்டிடிவி

By Chakra
|

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 இடங்களில் அதிமுக 25 இடங்களிலும், திமுக 11 இடங்களிலும் வெல்லும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

விஜய்காந்த், வைகோ, பாமகவை சேர்த்துக் கொண்டு பாஜக அமைத்த மெகா கூட்டணி 3 இடங்களில் மட்டுமே வெல்லும் என்றும் தெரியவந்துள்ளது. இதன்மூலம் அதிமுக கடந்த தேர்தலை விட 16 இடங்கள் அதிகமாகவும், திமுக 8 இடங்கள் குறைவாகவும் வெல்லும் என்கிறது கருத்துக் கணிப்பு.

NDTV Opinion Poll: Jayalalithaa to be big player in Tamil Nadu

பிப்ரவரியில் என்டிடிவி நடத்திய கருத்துக் கணிப்பின்போது அதிமுக மேலும் அதிகமான இடங்களில் வெல்லும் நிலைமை இருந்தது. ஆனால், தேர்தல் தேதி நெருங்க நெருங்க அதிமுகவின் வெற்றி வாய்ப்பு சரிந்து வருவதாகவும் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

தமிழக கட்சிகளும் ஓட்டு சதவீதமும்... காங்கிரசும்

என்டிடிவி கருத்துக் கணிப்பின்படி அதிமுகவுக்கு 41 சதவீதம் பேரும், திமுகவுக்கு 27 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பாஜக கூட்டணிக்கு 16 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரசுக்கு 5 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த 5 சதவீத ஓட்டை வைத்து காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெல்லாது என்றும் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

English summary
In Tamil Nadu, Jayalalithaa's the big player, the DMK takes a hit, and the Congress plunges, according to NDTV's opinion poll. Chief Minister Jayalalithaa's AIADMK gets 25 of the state's 39 parliamentary seats, that's 16 more than it got in the last election. 
 M Karunanidhi's DMK gets 11, that's eight less than 2009.The BJP gains two to get three seats. And the Congress gets none at all, that's down eight from 2009, when it contested the election in alliance with the DMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X