For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆறு மாதங்களாக குடிநீர் இல்லை... கொதித்தெழுந்த கிராமத்து மக்கள் சாலை மறியல்: வீடியோ

பவானி அருகில் உள்ள கரட்டுக்காடு கிராம மக்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக குடிந்ந்ர் முறையாக கிடைக்கதஹ காரணத்தால் அக்கிராமமக்கள்சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

By Suganthi
Google Oneindia Tamil News

மேட்டூர்: மேட்டூர் அருகில் குட்டம் முனியப்பன் சாலையில் பொதுமக்கள் தண்ணீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால், மேட்டூர் - பவானி சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கடந்த ஆறு மாதங்களாக குடிநீர் கிடைக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் வாழும் மக்கள் குடிநீருக்கு காவிரி நீரைத்தான் பிரதானமாக நம்பியுள்ளனர். ஆனால் இந்தாண்டு அம்ழை பொழிவு இல்லாத காரணத்தால் காவிரியில் நீர்வரத்து இல்லை. கர்நாடக அரசும் நீரை திறந்துவிட மறுத்துவிட்டது. இதனால் காவிரியை நம்பியிருந்த மக்கள் அனைவரும் குடிக்கக் கூட நீரில்லாமல் அல்லாடுகின்றனர்.

 Near Bhavani, karattukadu village people protested for water

பாவனி அருகே கரட்டுக்காடு பகுதியில் வசிக்கும் கிராம மக்களுக்கு கடந்த 6 மாதங்களாக குடிநீர் முறையாகக் கிடைக்கவில்லை. மேலும் கிடைக்கும் நீரும் வண்டல் கலந்து அசுத்தமாக உள்ளது. அதனால் அவ்வூர் பொதுமக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேட்டூர் - பவானி சாலையிலுள்ள குட்டம் முனியப்பன் சாலையில் பொதுமக்கள் தண்ணீர் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக நடந்த சாலை மறியல் போராட்டத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆனால் அந்த ஊர் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Near Bhavani, karaddukadu village people not getting drinking water for last 6 months properly and they protested in Mettur - Bhavani main road
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X