For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கள்ளக்காதலை விட மறுத்த போலீஸ்காரரின் மனைவி.. கள்ளக்காதலனை போட்டுத் தள்ளிய உறவினர்கள்!

நாமக்கல் அருகே போலீஸ்காரரின் மனைவி கள்ளக்காதலை விட மறுத்ததால் அவரது உறவினர்களே கள்ளக்காதலனை அடித்துக் கொன்றனர்.

Google Oneindia Tamil News

நாமக்கல்: கொல்லிமலை அருகே போலீஸ்காரர் மனைவியின் கள்ளக்காதலனை உறவினர்களே அடித்துக் கொன்றனர். இந்த வழக்கில் தற்போது மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையிலுள்ள பள்ளக்குழியைச் சேர்ந்த சிவபிரகாசம் என்பவர் காவல்துறையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி செல்வராணி நாமக்கல் நகரில் வேலை செய்து வருகிறார்.

இவர் நான்கு நாட்களுக்கு ஒரு முறை வீட்டுக்கு போய்வருவார் எனத்தெரிகிறது. செல்வராணிக்கும், அருகிலுள்ள ஊர்முடி என்ற கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.

கள்ளக்காதலை விட மறுப்பு

கள்ளக்காதலை விட மறுப்பு

இதனை பல முறை செல்வராணியின் கணவரும் அவரது உறவினர்களும் கண்டித்துள்ளனர். ஆனால் கள்ளக்காதலை விட மறுத்த அவர் செல்வராஜுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார்.

தர்ம அடி கொடுத்த உறவினர்கள்

தர்ம அடி கொடுத்த உறவினர்கள்

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை செல்வராணி கள்ளக்காதலன் செல்வராஜுடன் தோட்டத்தில் தனிமையில் சந்தித்து பேசியுள்ளார். இதனைக்கண்ட செல்வராணியின் தம்பியும் சிவபிரகாசத்தின் தம்பியும் அவரை அடித்து உதைத்தனர்.

கள்ளக்காதலன் கொலை

கள்ளக்காதலன் கொலை

இதில் கள்ளக்காதலன் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரை செய்தனர்.

மேலும் 3 பேர் கைது

மேலும் 3 பேர் கைது

இந்நிலையில் இந்தக்கொலையில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதல் பிடிவாதத்தால் ஒருவர் உயிரிழந்ததும் 5 பேர் எதிர்காலத்தை தொலைத்ததும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Near in Namakkal a police official's wife illicit lover killed by a their relatives. In this case 3 more persons have been arrested now.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X