For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போக்குவரத்து விதிமீறிய 576 பேரின் லைசென்ஸ் ரத்து... 3700 வாகனங்கள் பறிமுதல்.. திருவாரூரில் அதிரடி!

திருவாரூர் மாவட்டத்தில், போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 576 பேரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 3700 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டள்ளதோடு, 576 பேரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் செப்டம்பர் 6ம் தேதி முதல் வாகன ஓட்டுநர்கள் அசல் ஒட்டுனர் உரிமத்தை கையில் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவ்வபோது வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Nearly 576 license cancelled at Thiruvarur district in the case of violating traffic rules

அனைத்து வாகனங்களையும் மறித்து போலீசார் சோதனை செய்யாவிட்டாலும், அதிவேகமாக வாகனத்தில் செல்வோர், ஹெல்மெட், சீட்பெல்ட் போடாமல் செல்வோரை பிடித்து போலீசார் சோதனை நடத்துகின்றனர். இதே போன்று போக்குவரத்து விதிகளை மீறுபவர்களையும் பிடித்து அசல் ஓட்டுநர் உரிமம் உள்ளதா என்று போலீசார் சோதனையிடுகின்றனர்.

இந்நிலையில் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை பின்பற்றியதால் மாநிலத்திலேயே முதன்முறையாக திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 576 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதே போன்று போக்குவரத்து விதியை மீறியதால் 3 ஆயிரத்து 700 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி மயில்வாகனன் கூறியுள்ளார்.

English summary
Thiruvarur SP Mayilvahanan says that nearly 576 license cancelled for violating traffic rules and more than 3500 vehicles caught fr violating rules and regulations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X