For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக 123-ஆவது நாள் போராட்டம்- கைகளில் சூடம் ஏற்றிய மக்கள்

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் மக்கள் தங்கள் கைகளில் சூடம் ஏற்றி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 123 நாள்களாக போராட்டம் நடத்தி வரும் மக்கள் தங்கள் கைகளில் சூடம் ஏற்றி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயத்துக்கு கேடு விளைவிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி நெடுவாசல் மக்கள் ஏப்ரல் 12-ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Neduvasal people protest against Hydrocarbon for 123 rd day

இன்று 123-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் இவர்களது கோரிக்கைகளை இதுவரை நிறைவேற்றவில்லை. மேலும் எத்தனையோ கவன ஈர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டும் இவர்களது குரல் அரசின் காதில் விழவில்லை.

இதைத் தொடர்ந்து நெடுவாசல் கிராம பெண்கள் கைகளில் சூடம் ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது ஹைட்ரோ கார்பனுக்கு எதிராகவும், மத்திய- மாநில அரசுகளுக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.

English summary
Neduvasal protest today attains 123rd day. So the people of Neduvasal shows their oppose by lighting camphor in their hands.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X