For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்னது ஒரு வாக்காளருக்கு ரூ. 6 ஆயிரமா?... எங்களுக்கு தரலையேன்னு கட்சியினருடன் வாக்காளர்கள் 'லடாய்'!

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    எல்லார் கையிலும் ரூ.2000 நோட்டு... அடேங்கப்பா தொகுதியான ஆர் கே நகர்- வீடியோ

    சென்னை: இடைத்தேர்தல் என்றாலே பணப்பட்டுவாடா முழுவீச்சில் நடக்கும் என்பதை இந்தியாவே தமிழகத்தை வியந்து பார்த்துவருகிறது. ஆர்.கே நகர் தொகுதியில் மீண்டும் தேர்தல் அறிவித்தவுடன், எப்படி பணப்பட்டுவாடாவை செய்வது என்பதை அரசியல்கட்சியினர் யோசித்தனர். அதன்படி ஒவ்வொரு கட்சியினரும் ஒவ்வொருவிதமாக பணப்பட்டுவாடாவை செய்துள்ளனர்.

    பணம் கொடுப்பது, பரிசுப்பொருட்கள் வழங்குவது, பணமாற்ற ஆப் மூலம் பணத்தை அனுப்புதல், நகைக்கடனை மீட்டுக்கொடுத்தல், டோக்கன் மூலம் பரிசு வங்குவது, பால், பேப்பர் போடும் நபர்கள் மூலம் பணம் வழங்குவது என எல்லா முறைகளிலும் அரசியல் கட்சியினர் பணப்பட்டுவாடாவை செய்துள்ளதாக தொடர்ந்து செய்திவெளிகிவருகிறது.

    காவல்துறை தகவலின் படி, 30 வாக்களர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய ஒரு குழுவிரை அரசியல்கட்சியினர் நியமித்துள்ளதாகவும், தமிழகம் முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகளுக்கும் அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், ஆர்.கே நகர் மக்கள் அரசியல் கட்சியினர் மீது கோபமாக இருக்கிறர்கள்.

    எங்கே எங்களுக்கான பணம்?

    எங்கே எங்களுக்கான பணம்?

    கோபத்திற்கு காரணம் என்னவென்றால், செய்திகளில் 6 ஆயிரம் பணம் கொடுக்கப்பட்டது, 8 ஆயிரம் கொடுக்கப்பட்டது என்று சொல்லப்பட்டாலும், தங்களுக்கு பணம் வரவில்லை என்று அந்த தொகுதி மக்கள் கட்சி தேர்தல் பணிமனைகளை முற்றுகையிட்டனர். "பேப்பர்ல, நியூஸ்ல சொல்லறாங்க எங்க ஏரியால பணம் கொடுத்தாங்கன்னு ஆனால் எங்களுக்கு வரவில்லை" என்று ஏதோ அரசுநலத்திட்டம் கிடைக்காதது போல பணம் கேட்டுவருகின்றனர்.

    கட்சியினருடன் வாக்குவாதம்

    கட்சியினருடன் வாக்குவாதம்

    எங்களுக்கு கொடுத்ததா சொன்ன பணம் எங்கே நீங்களே ஆட்டய போட்டுட்டீங்களா என்று கட்சியினருடன் வாக்காளர்கள் லடாய் செய்யும் கூத்துகளும் ஆர்கே நகரில் நடக்கிறதாம். ஆக, பணம் வேண்டாம் என்று சொல்பவர்களைவிட, பணம் வேண்டும் என்பவர்களே ஆர்.கே நகர் வாக்காளர்களில் அதிகம்.
    வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டுகளுடன் கட்சியினரிடம் தொடர்ந்து முறையிட்டு வருவதைப்பார்க்க முடிகிறது. ஆராயிரமோ, எட்டாயிரமோ கையில் கிடைத்தால்தானே என்று புலம்பும் வாக்காளர்களையும் பார்க்கமுடிகிறது.

    பணம் கிடைக்காத வெறுப்பு

    பணம் கிடைக்காத வெறுப்பு

    கட்சிகள் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குற்றம்சாட்டி வருகின்றனர். திமுக கொடுத்துள்ள புகாரில் அதிமுக 100 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதிமுக முன்னாள் எம்பி பாலகங்கா வீட்டில் பணம்கொடுக்கப்படுவதாக வெளியான தகவலையடுத்து அவரது வீட்டில் வாக்காளர்கள் குவிந்தனர். அப்போது செய்தியாளர்களுக்கும், கட்சியினருக்கும் கைகலப்பு நடந்தது. மக்கள் ஊடகத்தினரை திட்டிவிட்டு, பணம் கிடைக்காத வெறுப்புடன் கலைந்து சென்றனர்.

    புரியவில்லையா வாக்காளர்களுக்கு

    புரியவில்லையா வாக்காளர்களுக்கு

    வறுமையில் இருக்கும் மக்களை ஆதாய நோக்கத்துடன் அரசியல் கட்சிகள் தான் பயன்படுத்துகிறது என்றால், பணத்தை வாங்கிவிட்டு வாக்களிக்கக் கூடாது என்ற அடிப்படை புரிதல் கூட மக்களுக்கு இல்லையே என்பது தான் மோசமான விஷயம். சில ஆயிரங்களை இப்போது வாங்குவதன் மூலம் எதிர்காலத்தில் பலகோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் கிடைக்காமல் போய்விடும், யாரையும் எதிர்த்து கேள்வி கேட்க முடியாத நிலை ஏற்படும் என்பதை வாக்காளர்கள் எப்போது உணர்கிறார்களோ அப்போது தான் இந்த பிரச்னை தீரும்

    English summary
    No barriers need more money from all political parties this is the real situation of voters in RK Nagar constituency, in some places voters argued aith political cadres demanding money.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X