For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எனக்கு பரோல் கிடைப்பதே ஆறுதலைத் தரும்... சிறையில் தாக்குதலுக்குள்ளான பேரறிவாளன் வேண்டுகோள்

Google Oneindia Tamil News

வேலூர்: தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் சக சிறை கைதி ராஜேஷ் கண்ணா இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டதையடுத்து பேரறிவாளனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு 6 தையல்கள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில், தனக்கு பரோல் கிடைப்பதே ஆறுதலைத் தரும் என்று பேரறிவாளன் தெரிவித்துள்ளார்.

Need Parole: Perarivalan

தனியார் தொலைக்காட்சியின் கேள்விகளுக்கு கடிதத்தின் மூலம் பதில் அனுப்பியுள்ள பேரறிவாளன், பரோல் கேட்டு தனது தாயார் கடந்த 8 மாதங்களாக காத்திருக்கிறார். எனவே, தமிழக முதல்வர் ஜெயலலிதா நேரடியாக தலையிட்டு பரோல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறை தாக்குதலில் இருந்து மெல்ல தேறி வருகிறேன். ஆனால் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. பரோல் கிடைப்பதே எனக்கு உடனடி ஆறுதலாக இருக்கும்.

சொந்த செலவில் தனியார் மருத்துவமனையிலோ அல்லது சென்னை அரசு மருத்துவமனையிலோ சிகிச்சை எடுக்க விரும்புகிறேன். என் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று அரசிடம் எதிர்பாக்கிறேன்.

பரோலில் விடுவித்தால் என் உடல்நலம் மட்டுமல்லாமல் என் தந்தையின் சிகிச்சைகளுக்கும் ஏற்பாடு செய்ய இயலும் என்று பேரறிவாளன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

English summary
Perarivalan, a life convict in the Rajiv Gandhi assassination case, demands parole for his treatment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X