For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீட்டிற்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்களின் எண்ணிக்கையில் பெரும் சரிவு.. 17% குறைவு.. ஷாக்கிங்!

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்துள்ளது. இந்த வருடம் நீட்டிற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 17% குறைந்துள்ளது.

நன்றாக சென்று கொண்டு இருந்த மருத்துவ சேர்க்கையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதில் இருந்தே பிரச்னைகள்தான் நடந்து வருகிறது. ஏழை மாணவர்கள் ஏற்கனவே நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

NEET: Admission for the exam declined 17% compared to last year in TN

இன்னொரு பக்கம் நீட் தேர்வு ஆள்மாறாட்டம் பெரிய பூதாகரமாகி உள்ளது. சென்ற முறை நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் சிலருக்கு தெலுங்கானா, ஆந்திரா ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இது மாணவர்களுக்கு பெரிய அளவில் கஷ்டத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே நீட் தேர்வை கடுமையாக எதிர்க்கும் தமிழகத்துக்கு இன்னும் கோபத்தை கொடுத்தது.

அதேபோல் நீட் தேர்வு காரணமாக இதுவரை தமிழகத்தில் அனிதா தொடங்கி 6க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலியானார்கள். வருடா வருடம் இதை மக்கள் எதிர்த்து வருகிறார்கள். ஆனாலும் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்யாமல் தொடர்ந்து நடத்தி வருகிறது.

பால் விலையைப் பத்தி எந்தக் கட்சியாச்சும் கவலைப்பட்டுச்சா.. அதை விட்டுட்டு ரஜினி பின்னாடியே திரிங்க! பால் விலையைப் பத்தி எந்தக் கட்சியாச்சும் கவலைப்பட்டுச்சா.. அதை விட்டுட்டு ரஜினி பின்னாடியே திரிங்க!

இந்த வருடம் நீட் தேர்வு தமிழகத்தில் வரும் மே 3ம் தேதி நடக்கிறது, கடந்த டிசம்பர் 2-ம் தேதி தொடங்கிய விண்ணப்பத் தேதி, ஜனவரி 1-ம் தேதி வரை நடந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் இந்த வருடம் நீட் தேர்விற்கு விண்ணப்பம் செய்தவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் சரிந்துள்ளது.

இந்நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்துள்ளது. ஆம் கடந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இந்த வருடம் இதில் 17% குறைந்துள்ளது. ஆம் சென்ற வருடத்தை விட இந்த வருடம் நீட் தேர்வு எழுத மாணவர்களுக்கு ஆர்வம் குறைந்துள்ளது.

இந்த ஆண்டு 1 லட்சத்து 17 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வெழுத விண்ணப்பித்துள்ளனர். இந்த வருடத்திற்கான இலவச நீட் தேர்வு பயிற்சி மையங்களை அரசு நடத்த போவதில்லை என்று முடிவெடுத்துள்ளது. இதுவும் கூட மாணவர்களுக்கு நீட் தேர்வு மீதான ஆர்வம் குறைய காரணம் என்கிறார்கள்.

இலவச பயிற்சி முகாம் இல்லாமல், பணம் கட்டி படிக்கும் முகாம் எல்லாம் அதிக செலவு என்பதால் மாணவர்கள் அதையும் செய்வதில்லை. அதேபோல் தேர்வு எழுத செல்லும் மாணவர்களின் உடையை கிழித்து சோதனை செய்வது உள்ளிட்ட மோசமான சோதனைகள் காரணமாக உளவியல் ரீதியாக மாணவர்கள் அதிகம் கஷ்டப்படுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதெல்லாம் தமிழகத்தில் நீட் எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
NEET: Admission for the exam declined 17% compared to last year in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X