For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீட் தேர்வால் மருத்துவக் கல்வியின் தரம் உயரும் என்பது வேடிக்கை : அன்புமணி

நீட் தேர்வால் மருத்துவக் கல்வியின் தரம் உயரும் என்பது வேடிக்கை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை : நீட் தேர்வால் மருத்துவக் கல்வியின் தரம் உயரும் என்று மத்திய அரசு சொல்வது வேடிக்கையாக இருக்கிறது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து, தேர்வில் தோல்வியடைந்ததால் தமிழகத்தில் இரண்டு மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதனால் நீட் தேர்வுக்கான எதிர்ப்பு தமிழகத்தில் வலுத்துள்ளது.

NEET allows only elite people to study Medical says Anbumani

இதுகுறித்து பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நீட் தேர்வால் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு சூறையாடப்பட்டுள்ளது. பணம் படைத்தவர்கள் மட்டுமே மருத்துவம் படிக்க நீட் தேர்வு அனுமதி வழங்குகிறது.

நீட் தேர்வு தகுதியை உறுதி செய்யும் தேர்வாக இல்லை. ஆனால், மத்திய அரசு இதன் மூலம் மருத்துவக் கல்வியின் தரம் உயரும் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது.

இதன் மூலம் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மருத்துவப் படிப்பு இடங்களை அதிக பணத்திற்கு விற்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
NEET allows only elite people to study Medical says Anbumani. PMK Youthwing Leader Anbumani Ramadoss says that, NEET is not for Poor people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X