For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் நீட் அடிப்படையிலான ரேங்க் பட்டியல் நாளை வெளியீடு.. நாளை மறுநாள் கவுன்சலிங் தொடக்கம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வு அடிப்படையில் நாளை ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு வழங்க முடியாது என்று மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதம் முன் வைக்கப்பட்டது. இதையேற்ற சுப்ரீம்கோர்ட், தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கவில்லை.

NEET based rank list will be published on tomorrow: Tamilnadu Government

இந்த நிலையில், ராதாகிருஷ்ணன், ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: நீட் தேர்வு அடிப்படையில் நாளை மறுநாள் மருத்துவ கவுன்சலிங் தொடங்க உள்ளது. ரேங்க் பட்டியல் நாளை பிற்பகல் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 4ம் தேதிக்குள் கவுன்சிலிங்கை முடிக்க தமிழக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கவுன்சலிங் மற்றும் ரேங்க் பட்டியல் வெளியீடு என தமிழக அரசு மும்முரம் காட்டுவதை பார்த்தால் நீட்டிலிருந்து விலக்கு அளிக்க இனிமேல் எந்த முயற்சியையும் எடுக்க மாட்டார்கள் என தெரிகிறது.

English summary
Tamilnadu Health Secretary Radhakrishnan said that NEET based rank list will be published on tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X