For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீட்: தமிழில் எழுதியவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள்.. ஹைகோர்ட் தீர்ப்பால் என்ன பலன் தெரியுமா?

நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற உத்தரவு, தமிழக மாணவர்களுக்கு பெரிய அளவில் பலன் அளிக்கும். நிறைய நன்மைகள் இதனால் அவர்களுக்கு ஏற்படும்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழில் நீட் எழுதியவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க அதிரடி உத்தரவு- வீடியோ

    மதுரை: நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற உத்தரவு, தமிழக மாணவர்களுக்கு பெரிய அளவில் பலன் அளிக்கும். நிறைய நன்மைகள் இதனால் அவர்களுக்கு ஏற்படும்.

    தமிழில் நீட் எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.நீட் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டதில் நிறைய குளறுபடிகள் செய்யப்பட்டுள்ளதால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி ராஜ்யசபா உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், ஹைகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார்.

    NEET Exam Mistakes: Tamil Students will get grace marks, What are the benefits?

    49 வினா-விடைகள் தவறாக இருந்ததால் கேள்விக்கு 4 மதிப்பெண் என்று மொத்தமாக தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண் வழங்க வேண்டும். அதோடு புதிய மதிப்பெண் அடிப்படையில் சிபிஎஸ்இ புதிய தரவரிசை பட்டியல் உருவாக்க வேண்டும்.

    தமிழகத்தில் மொத்தம் 24,000க்கும் அதிகமான மாணவர்கள், தமிழில், நீட் தேர்வு எழுதி இருக்கிறார்கள். இதனால் இவர்கள் எல்லோருக்கும் தனித்தனியாக மொத்தம் 190 மதிப்பெண்கள் அளிக்க வேண்டும். இது தமிழக மாணவர்களுக்கு பெரிய அளவில் பலன் அளிக்கும்.

    இதன் மூலம் மிகவும் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கும் தற்போது வாய்ப்பு கிடைக்க வழியுள்ளது. முக்கியமாக தற்போது முதற்கட்ட, கவுன்சிலிங் முடிந்து இருக்கிறது. இதனால் இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் இவர்களுக்கு சீட் கிடைக்க வாய்ப்புள்ளது.

    சிபிஎஸ்இ தமிழக மாணவர்களை வஞ்சித்ததற்கு எதிராக மதுரை ஹைகோர்ட் கிளை சாட்டையை சுழற்றி இருக்கிறது. இது மத்திய அரசின் தவறால் அவதிப்பட்ட தமிழக மாணவர்களுக்கு வாழ்வளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    NEET Exam Mistakes: Final Verdict on Grace Mark for Tamil Students came out. Madurai High Court Bench pronounced that Tamilnadu students should get their grace marks.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X