For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீட் தேர்வு முடிவு: அகில இந்திய அளவில் தமிழகத்திற்கு 35வது இடம்!

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் தமிழகத்திற்கு 35வது இடம் கிடைத்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    நீட் தேர்வு முடிவுகள் வெளியானது- வீடியோ

    சென்னை: நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் தமிழகத்திற்கு 35வது இடம் கிடைத்துள்ளது.

    மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுகள் இன்று வெளியானது. முன்னதாக நீட் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் தேர்வு முடிவுகளை முன்கூட்டியே வெளியிட்டது. மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் cbseneet.nic.in என்ற இணையதளத்தில் வெளிடப்பட்டது.

    பாதிக்கு பாதி தேர்ச்சி

    பாதிக்கு பாதி தேர்ச்சி

    நாடு முழுவதும் மே 6-ம் தேதி நடந்த நீட் நுழைவுத் தேர்வை 13,26,725 பேர் எழுதினார்கள். இதில் 7,14,562 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

    பீகார் மாணவி

    பீகார் மாணவி

    தமிழ், ஆங்கிலம், உட்பட மொத்தம் 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்றது. பீகாரைச் சேர்ந்த கல்பனா குமாரி என்ற மாணவி 691 மதிப்பெண்களுடன் தேசிய அளவில் முதலிடம் பிடித்தார்.

    ராஜஸ்தான் முதலிடம்

    ராஜஸ்தான் முதலிடம்

    இந்நிலையில் நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 56% தேர்ச்சியடைந்துள்ளனர். இதில் ராஜஸ்தான் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் நீட் தேர்வில் 74 சதவீத தேர்ச்சியை கொடுத்துள்ளது.

    டெல்லி,ஹரியானா

    டெல்லி,ஹரியானா

    அடுத்த படியாக டெல்லி 74% சதவீத தேர்ச்சியை கொடுத்து 2ஆம் இடத்தையும் ஹரியான 73% சதவீத தேர்ச்சியை கொடுத்து மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.

    தமிழகம் 35வது இடம்

    தமிழகம் 35வது இடம்

    ஆந்திரா 73% தேர்ச்சியுட்ன் நான்காம் இடத்தையும் சண்டிகர் 72 சதவீத தேர்ச்சியுடன் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது. தமிழகம் 39% தேர்ச்சி விகிதத்துடன் 35வது இடத்தை பிடித்துள்ளது.

    ஒரே ஒரு தமிழ் மாணவி

    ஒரே ஒரு தமிழ் மாணவி

    முதல் 50 இடங்களில் ஒரே ஒரு தமிழ்நாட்டு மாணவி மட்டுமே இடம் பிடித்துள்ளார். தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில் 45,336 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

    English summary
    Neet exam resutl Tamil Nadu gets 35th place in national level.45336 students are qualified in the Neet Exam from Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X