For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீட் தேர்வு: நெல்லையில் இருந்து எர்ணாகுளம் புறப்பட்டது சிறப்பு பேருந்து!

நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுடன் நெல்லையில் இருந்து 5 சிறப்பு பேருந்துகள் எர்ணாகுளம் புறப்பட்டன.

Google Oneindia Tamil News

Recommended Video

    நீட் தேர்வுக்கான சிறப்பு பேருந்துகள் புறப்பட்டது-வீடியோ

    நெல்லை: நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுடன் நெல்லையில் இருந்து 5 சிறப்பு பேருந்துகள் எர்ணாகுளம் புறப்பட்டன.

    நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நாளை நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் போதுமான அளவு நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படாததால் தமிழக மாணவர்கள் பலருக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    NEET exam: Special buses started to Ernakulam from Nellai

    தமிழக மாணவர்கள் 5,371 பேர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நீட் தேர்வு எழுதுகின்றனர். மதுரையிலிருந்து 1,550 பேர், திருச்சியிலிருந்து 1,520 பேர், நெல்லையிலிருந்து 2,301 பேர் கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு சென்று தேர்வு எழுதுகின்றனர்.

    வெளி மாநிலங்களில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு இலவச ரயில் டிக்கெட் உள்ளிட்ட சலுகைகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு எழுதச்செல்லும் மாணவர்களுடன் நெல்லையில் இருந்து சிறப்பு பேருந்துகள் எர்ணாகுளம் புறப்பட்டது.

    நெல்லையில் இருந்து 5 சிறப்பு பேருந்துகள் எர்ணாகுளம் புறப்பட்டது. இந்த சிறப்பு பேருந்து சேவையை ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.

    English summary
    NEET exam: Special buses started to Ernakulam from Nellai. Collector Sandhip Nandhuri started this Special bus service.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X