For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Breaking News: நீட் தேர்வை எதிர்க்க 6 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கோரிக்கை

நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் நீட் தேர்வை எதிர்க்க வேண்டும் என 6 மாநில முதல்வர்களுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

NEET Fail: Villupuram Student commits suicide Live updates

இன்றைய செய்திகளின் லைவ் அப்டேட்டுகளை இப்பகுதியில் பார்க்கவும்:

Newest First Oldest First
8:13 PM, 5 Jun

கல்வியை மாநில பட்டியலுக்கே மீண்டும் கொண்டுவர வேண்டும் - திருமாவளவன்
பொதுப்பட்டியலில் இருந்து கல்வியை மாற்ற வேண்டும்
மருத்துக்கல்வியில் நாட்டில் முதலிடத்தில் இருந்தது தமிழகம்
நீட் தேர்வால் தற்போது தமிழகம் கடைசி இடத்துக்கு சென்றுள்ளது
தமிழ் வழியில் எழுதிய மாணவர்களுக்கு எதிரான சதி இது - திருமாவளவன்
அவசரமாக தேர்வு முடிவு வெளியிடப்பட்டது சதி
தமிழக அரசு எந்த அக்கறையும் இல்லாமல் மத்திய அரசின் சதிக்கு துணைபோகிறது - திருமாவளவன்
7:38 PM, 5 Jun

காலா பட வெளியீட்டை தள்ளிவைத்து இருக்கலாம் - சரத்குமார்

தூத்துக்குடி விவகாரம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் காலாவை தள்ளிவைத்து இருக்கலாம்

7:08 PM, 5 Jun

ஏர்செல்-மேக்சிஸ்: ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை நிறைவு

ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை 7 மணி நேரம் விசாரணை நடத்தியது

7:07 PM, 5 Jun

நீட் தேர்வினால் உயிரிழந்த பிரதீபாவின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி

செஞ்சி பெரவளுரில் உள்ள பிரதீபாவின் இல்லத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்

6:24 PM, 5 Jun

காலாவிற்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் - குமாரசாமி

படத்தை வெளியிட்டால் விளைவுகளை தயாரிப்பாளர்தான் எதிர்கொள்ள வேண்டும்

காலா பற்றிய ஹைகோர்ட் தீர்ப்பு நகல் இன்னும் வரவில்லை -குமாரசாமி

5:42 PM, 5 Jun

காலாவை வெளியிட ரஜினிக்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை புதிய நிபந்தனை

காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினி தெரிவிக்க வேண்டும்

காவிரி தொடர்பாக இரு மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ரஜினி கூற வேண்டும்

விவசாயிகள் கூடி பேச்சு வார்த்தை நடத்த ரஜினி அழைக்க வேண்டும்

5:35 PM, 5 Jun

சென்னை காவல்துறை மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு
பத்திரிகையாளர் முரளி கிருஷ்ணா வழக்கு தாக்கல்
காமெடி நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்யாததைக் கண்டித்து வழக்கு
ஹைகோர்ட், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் கூட எஸ்.வி.சேகர் கைது செய்யப்படவில்லை
போலீஸ் பாதுகாப்புடன் எஸ்.வி.சேகர் சுதந்திரமாக நடமாடி வருகிறார்
பெண்களை இழிவுபடுத்திய கருத்தை ரீட்வீட் செய்து சிக்கியவர் எஸ்.வி.சேகர்
5:21 PM, 5 Jun

2016 அக்டோபர் 4-ஆம் தேதியே ஜெ.வுக்கு நெஞ்சுவலி- அப்பல்லோ மருத்துவர் அர்ச்சனா தகவல்
5:16 PM, 5 Jun

பெங்களூரில் பெண் பயணியை ஆடை அவிழ்த்து போட்டோ எடுத்த கால் டாக்சி டிரைவர்

'ஓலா' நிறுவன கால் டாக்சி டிரைவரால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

5:16 PM, 5 Jun

கச்சநத்தம் படுகொலை: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல்

கொல்லப்பட்ட 3 பேரின் குடும்பத்தினருக்கு ராகுல் இரங்கல்

சிவகங்கை கச்சநத்தம் மோதலில் 3 பேர் பலியாகினர்

4:57 PM, 5 Jun

நீட் தேர்வை மாற்றவே முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்

மருத்துவத்துக்கு பதில் வேறு படிப்பு படிக்கலாம்

உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே நீட் தேர்வு நடத்தப்படுகிறது

நீட் தேர்வு குறித்த கருத்துகளை தலைவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்

4:40 PM, 5 Jun

தமிழக மகளிர் காங். பொறுப்பாளர் பதவியில் இருந்து நக்மா அதிரடி நீக்கம்
3:39 PM, 5 Jun

துப்பாக்கிச் சூடு- 6 பேரின் உடல்களை உடற்கூறாய்வு செய்யலாம்: ஐகோர்ட்
2:44 PM, 5 Jun

ஒரு கதவு மூடினால் மறு கதவு திறக்கும் - விஜயகாந்த்

மாணவர்கள் கோழைத்தனமான முடிவை எடுக்கக்கூடாது

எல்லாவற்றுக்கும் மாற்றுவழி உண்டு என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாணவ, மாணவிகளுக்கு வேண்டுகோள்

2:35 PM, 5 Jun

காலா ரிலீசாகும் தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: கர்நாடகா ஹைகோர்ட் உத்தரவு

காலா படத் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் கோர்ட் அதிரடி

2:34 PM, 5 Jun

சுற்றுச்சூழலை காக்க போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கக் கூடாது

ஐ.நா.வின் சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் எரிக் சோல்ஹைம் கருத்து

2:22 PM, 5 Jun

நீட்டை எதிர்க்க கேரளா, கர்நாடகா, ஆந்திரா முதல்வர்களுக்கு ஸ்டாலின் கோரிக்கை
புதுவை, மே.வங்கம், தெலுங்கானா முதல்வர்களுக்கும் ஸ்டாலின் வேண்டுகோள்
2:20 PM, 5 Jun

நீட் தேர்வை எதிர்க்கும் 6 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கோரிக்கை
கிராம, ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வால் பாதகம்- ஸ்டாலின்
நீட் தேர்வை எதிர்க்க 6 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கோரிக்கை
2:05 PM, 5 Jun

தற்கொலை செய்துகொண்ட பிரதீபாவின் உடல் ஒப்படைப்பு

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்டார் பிரதீபா

கோரிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்வதாக ஆட்சியர் உறுதி

நிபந்தனைகளை கோரிக்கை மனுவாக ஆட்சியர் ஏற்றதால் உடலை பெற்றனர் பெற்றோர்

1:36 PM, 5 Jun

பிரதீபா உடற்கூறாய்வு நிறைவு பெற்றது

உடற்கூறாய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த உறவினர்கள் கைது

1:34 PM, 5 Jun

முதல்வர் எடப்பாடி ஜூன் 15-ல் டெல்லி பயணம்

டெல்லியில் ஜூன் 16-ல் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்பு

1:13 PM, 5 Jun

காலா- தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

திரவியம் நாடார், நாடார் சமூகம் குறித்து தவறான கருத்துகள் - மனு

தவறான கருத்துகளை நீக்கும் வரை காலா படத்தை வெளியிட தடை தேவை: வக்கீல் சுரேந்தர்

1:10 PM, 5 Jun

காலா படத்தை திரையிட அரசை வற்புறுத்த முடியாது - கர்நாடக உயர்நீதிமன்றம்

காலா படத்தை வெளியிட கோரி தனுஷ் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

காலா பிரச்சனை குறித்து கர்நாடக அரசிடம் முறையிடலாம்

அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம்

12:51 PM, 5 Jun

மீண்டும் வேலை நிறுத்தத்தில் குதிக்கும் அரசு போக்குவரத்து ஊழியர்கள்

2 வார நோட்டீஸ் காலத்திற்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் போராட்டம்

ஓய்வூதிய பலன்களை வழங்க வலியுறுத்தி நோட்டீஸ்

10 தொழிற்சங்கங்கள் இணைந்து வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்க முடிவு

12:38 PM, 5 Jun

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே பயங்கர சாலை விபத்து
இருசக்கர வாகனம் - லாரி மோதி 3 இளைஞர்கள் பரிதாப பலி
அதிவேகமாக பைக் ஓட்டியதே விபத்துக்கு காரணம் என தகவல்
12:19 PM, 5 Jun

திருச்செந்தூர் கோயில் அர்ச்சகர்கள் பக்தர்களிடம் பணம் பறிக்க கூடாது: ஹைகோர்ட் மதுரை கிளை

ஏழை, பணக்காரர் என பாகுபாடின்றி ஒரே விதமாக அனைத்து பக்தர்களையும் நடத்த வேண்டும்: நீதிமன்றம்

இந்து சமய அறநிலையத்துறை, திருச்செந்தூர் கோவில் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

11:29 AM, 5 Jun

துப்பாக்கிச் சூடு- மாஜி ஆட்சியர் வெங்கடேசனிடம் விசாரணை
வெங்கடேசனிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை
11:29 AM, 5 Jun

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க தமிழக அரசு முடிவு
சட்டசபை விதி எண் 110ன்கீழ் முதல்வர் அறிவிப்பு
11:22 AM, 5 Jun

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ப. சிதம்பரம் ஆஜர்

ஏர்செல் மேக்சிஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் ஆஜர்

விசாரணைக்கு ஆஜரான சிதம்பரத்தை கைது செய்ய கோர்ட் தடை

11:07 AM, 5 Jun

நீட்டில் கடைசி இடம்: தமிழக அரசின் படுதோல்வி - ராமதாஸ்
READ MORE

English summary
Villupuram Student Pradeepa who failes to qualify in NEET commits suicide.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X