For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீட் கருணை மதிப்பெண்: சிபிஎஸ்இ தலைவர் மீது கடும் நடவடிக்கை தேவை.. ஸ்டாலின் கோரிக்கை

நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க கூடாது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க கூடாது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டதில் நிறைய குளறுபடிகள் செய்யப்பட்டுள்ளது.இந்த பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கட்சி ராஜ்யசபா உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், ஹைகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார்.

NEET Grace Marks Case: Stalin condemns CBSE

இதை மதுரை ஹைகோர்ட் கிளை 49 வினா-விடைகள் தவறாக இருந்ததால் கேள்விக்கு 4 மதிப்பெண் என்று மொத்தமாக தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஎஸ்இ உச்ச நீதிமன்றம் சென்றது. நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க வாய்ப்பில்லை என்று டெல்லி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில், தமிழில் நீட் தேர்வுஎழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

இதற்கு முழுக்காரணம் சிபிஎஸ்இ மட்டுமே! துரோகத்தை செய்துவிட்டு மாணவர்களை குற்றஞ்சாட்டுவது ஆணவத்தின் உச்சம்!

தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வெழுத தேர்வு மையங்கள் ஒதுக்கியதில் பிரச்சினை!

கேள்வித்தாள் மொழிபெயர்ப்பில் குளறுபடிகளை செய்தது - என நம் மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கிய சிபிஎஸ்இ தலைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரை வலியுறுத்துகிறேன்!, என்று தெரிவித்துள்ளார்.

English summary
NEET Grace Marks Case: DMK chief Stalin condemns CBSE.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X