For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குற்றாலத்தில் கூடுதல் ஆம்புலன்ஸ் வசதி... மாவட்ட ஆட்சியர் தகவல்!

குற்றாலத்தில் கூடுதல் ஆம்புலன்ஸ் வசதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

குற்றாலம்: குற்றாலத்தில் கூடுதல் ஆம்புலன்ஸ் வசதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி தெரிவித்துள்ளார். குற்றாலம் படகு குழாமில் இந்த ஆண்டு கூடுதலாக வசூலாகும் என்றும் அவர் கூறினார்.

நெல்லை மாவட்டம் குற்றாலம் ஐந்தருவியில் மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நெல்லை மாவட்டத்திலேயே முக்கியமான சுற்றுலாத்தலங்களில் குற்றாலம் சிறப்பு வாய்ந்தது என்றார்.

Nellai District Collector Nanduri said that additional ambulance services will be provided in the Kuttralam

இங்குள்ள படகு குழாமில் 34 படகுகள் உள்ளன. 4பேர் பயணம் செய்யும் படகுகள் 5, இருவர் பயணம் செய்யும் படகுகள் 10 என 34படகுகள் உள்ளன. மேலும் சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பாய் பயணிக்க லைப் ஜாக்கெட், ஆபத்துகாலத்தில் உதவிட 4 பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும் மெயினருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் முதன்முதலாக காயம்பட்டவர்களை காப்பாற்ற முதலுதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் அம்புலன்ஸ் வாகனம் 108 ஓன்று உள்ளது.

இன்னும் ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் இங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட உள்ளது. மேலும் இருசக்கரவாகன ஆம்புலன்ஸ் வசதியும் இன்னும் 2 நாட்களில் ஏற்படுத்தப்பட உள்ளது. குற்றாலம் படகு குழாமில் கடந்த ஆண்டு 5 லட்சம் ரூபாய் வசூலானது. இந்தாண்டு கூடுதலாக வசூல் ஆகும் என்று நம்பப்படுகிறது என்றார்.

English summary
Nellai District Collector Nanduri said that additional ambulance services will be provided in the Kuttralam. He added that this year income will be increased in the Kuttralam boat booth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X