For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சர்வதேச யோகா தினம்... நெல்லை, மதுரை என்சிசி மாணவர்கள் 20692 பேர் பங்கேற்பு

Google Oneindia Tamil News

நெல்லை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் தென் மாவட்டங்களில்சுமார் 20,692 என்.சி.சி. மாணவர்கள் பங்கேற்று யோகா பயிற்சி மேற்கொண்டனர்.

முதல் சர்வதேச யோகா தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப் பட்டது. அதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் என்சிசி சார்பில யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

Nellai NCC students Yoga day

தென் மாவட்டங்களான மதுரை, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி, மாணவ, மாணவிகள் பங்கேற்ற சர்வதேச யோகா நிகழ்ச்சி 14 மையங்களில் நடந்தது.

நெல்லை மாவட்டத்தில் என்சிசி கர்னல் ஜய்தல் தலைமையில் பாளை ஐான்ஸ் மைதானத்தில் அரை மணி நேர யோகா நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் 1600 என் சிசி மாணவர்கள் கலந்து கொணடு யோகா செய்தனர். யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளிகளில் உள்ள யோகா மாஸ்டர்கள் மூலம் மாணவர்களுக்கு யோகா கற்பிக்கப்பட்டது.

தென்காசி இசக்கி வித்யாஸ்ரமம் பள்ளியில் நடந்த யோகாவை என்சிசி லெப்டினேட் கர்னல் கிருஷ்ணன் நாயர் துவங்கி வைத்தார். இதில் 1576 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இது போல் தென் மாவட்டங்களில் 14 மையங்களில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

English summary
On International Yoga day, the NCC students in Nellai district performed yoga.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X