For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இது ரூ. 10 நோட்டா, இல்லை, ரூ. 110 நோட்டா... பாவம் இந்த வியாபாரியே கன்பியூஸ் ஆயிட்டாரு!

Google Oneindia Tamil News

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் கிழித்த பத்து ரூபாய் நோட்டை வாங்கிய வியாபாரி, அதில் 110 என இருந்ததைக் கண்டு அதிரிச்சியில் உறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிழித்த ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து வேறு ரூபாய் நோட்டுகளை வாங்கி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சாதாரண பத்து ரூபாய்க்கு போய் வங்கிக்கு செல்வதா என பலரும அலுத்து கொண்டு டேப் கொண்டு ஓட்டி ஏமாந்தவர்கள் தலையில் கட்டி விடுகின்றனர்.

அந்தவகையில், சங்கரன்கோவில் பகுதியில் இப்படி கிழிந்த ரூபாய் நோ்ட்டை ஓட்டிய ஒருவருக்கு என்ன அவசரமோ தெரியவில்லை. கிழித்த இரண்டு 10 ரூபாய் நோட்டுகளை சேர்த்து ஓன்றாக சேர்த்து ஓட்டி விட்டார். இதனால், அந்த ரூபாய் நோட்டில் மத்தியில் உள்ள 10 ரூபாய் என்ற எண் 110 என மாறிவிட்டது.

பின்னர் அந்த ரூபாய் நோட்டை கடையொன்றில் கொடுத்து விட்டு அவர் மாயமாகி விட்டார். இந்நிலையில் இரவில் கடையை அடைக்கும் போது கணக்கை சரிபார்த்த வியாபாரி இந்த நோட்டை பார்த்து அதிரிச்சியில் உறைந்து விட்டார்.

காரணம் இரண்டு வெவ்வேறு 10 ரூபாய் நோட்டுகளை நடுவில் சேர்த்து வைத்து ஓட்டியிருந்தது தான். ஓருபக்க சீரியல் நம்பர் வேறாகவும், இன்னொரு பக்க சீரியல் நம்பர் வேறாகவும் இருந்தது. இதனால் தான் 10 பதில் 110 என ஓட்டப்பட்டு வந்துள்ளது.

பின்னர் தான் ஏமாற்றப் பட்டதை உணர்ந்த வியாபாரி, இது தொடர்பாக மற்ற வியாபாரிகளிடம் கூறி அவர்களையும் எச்சரித்தார்.

English summary
In Sankarankoil in Tirunelveli district a merchant was shocked on seeing a ten rupees note, in \which the number appeared as Rs.110. The merchant was fooled a customer unfortunately.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X