For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாட்டின் பாதுகாப்புக்காக புதிய ரேடார் அமைத்த நெல்லை வி்ஞ்ஞானிக்கு அக்னி விருது!!

நாட்டின் பாதுகாப்புக்காக புதிய ரேடார் அமைத்த நெல்லை வி்ஞ்ஞானி ஞான மைக்கேல் பிரகாசத்துக்கு அக்னி விருது வழங்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

நெல்லை: நாட்டின் பாதுகாப்புக்காக புதிய ரேடார் அமைத்த நெல்லை வி்ஞ்ஞானிக்கு அக்னி விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி வழங்கி பாராட்டினார். அவரோடு பணியாற்றிய 30 வி்ஞ்ஞானிகளுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் கீழப்பாவூரை சேர்ந்தவர் ஞான மைக்கேல் பிரகாசம். இவர் பெங்களூருவில் உள்ள டிஆர்ஓவில் எலக்ட்ரானிக் ரேடார் மேம்பாட்டு ஆராய்ச்சி அமைப்பில் தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். இவர் தலைமையிலான குழுவினர் கடந்த ஐந்து ஆண்டுகளாக நாட்டின் பாதுகாப்புக்கான ரேடாரை வடிவமைத்து வந்தனர்.

Nellai scientist got a Agni award for set up a radar for the security of the country

இதற்கான பணிகள் வெற்றிக்கரமாக முடிக்கப்பட்டு ரேடார் ஒப்படைக்கப்பட்டது. இதனை பாதுகாப்பு துறை சோதனை செய்து அதன் சிறப்பான செயல்பாடுகளை அங்கீகரித்தது. இந்திய தொழில் நுட்பத்தில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஆருத்ரா ரேடார் கடந்த குடியரசு தினத்தில் நாட்டிற்கு அர்பணிக்கப்பட்டது.

இந்நிலையில் டெல்லியில் நடந்த விழாவில் நாட்டின் பாதுகாப்புக்கான ரேடாரை அமைத்த ஞான மைக்கேல் பிரகாசத்திற்கு அக்னி விருதை மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி வழங்கி பாராட்டினார். இவரோடு பணியாற்றிய 30 சிறந்த வி்ஞ்ஞானிகளுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது. இந்த ரேடார் மூலம் இந்தியாவுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் அந்நிய செலவாணி மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A scientist who belongs to Nellai got a Agni award for set up a Radar for the security of the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X