For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெல்லையில் மீண்டும் தலை தூக்கும் டெங்கு... சிறுவன் பலி... முகாமிட்ட சுகாதாரத்துறையினர்

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் ஒருவன் பலியானதைத் தொடர்ந்து, சுகாதாரத் துறையினர் அனைத்து வீடுகளிலும் கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள தாளார்குளம் கிராமததை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகன் ரியோ ஜெசி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சோர்வடைந்த நிலையில் கடந்த 11ம்தேதி நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில சேர்க்கப்பட்டான். அங்கு குழந்தைகள் வார்டு சிறப்பு சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுவன் ஜேசி பரிதாபமாக இறந்தான்.

Nellai suffers in dengue again

அவனுககு ஏற்பட்ட காய்ச்சல் ஏது என்பது குறித்து உறுதி செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் சிறுவனின் ரத்த மாதிரி சோதனையில் அவனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து நெல்லை சுகாதார துறை இனை இயக்குனர் ராம்கணேஷ் தலைமையில் தாளார்குளம் கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களாக சிறப்பு மருத்துவ முகாம் நடந்து வருகிறது. அந்த கிராமத்தில் மேலும் யாருக்காவது காய்ச்சல் இருக்கிறதா என சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது மேலும் 4 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

இதையடுதது அனைத்து வீடுகளிலும் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. வாட்டர் டேங்க், குடிநீர் தொட்டிகளில் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. சிரட்டைகள், பழைய டயர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது நெல்லை மவட்டத்தில் பல பகுதிகளில் கொசு ஓழிப்பு பணியாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளார்கள். இதனால் சுகாதாரம் கேள்வி குறியாகி உள்ளது. இந்த நிலையில் மீண்டும் டெங்கு தலை தூக்கியுள்ளதால் அப்பகுதி மக்களும், சுகாதார துறையினரும் அதிர்சசி அடைந்துள்ளனர்.

English summary
In Nellai many people are affected with dengue fever and admitted in government and private hospitals.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X