For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புஷ்கர விழா கோலாகலம்.. தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினார் ஆளுநர் பன்வாரிலால்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மஹா புஷ்கர விழா இன்று தொடங்கியது

Google Oneindia Tamil News

Recommended Video

    144 ஆண்டுகளுக்கு பிறகு தாமிரபரணி மஹா புஷ்கர விழா- வீடியோ

    நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 144 ஆண்டுகளுக்கு பிறகு தாமிரபரணி மஹா புஷ்கர விழா இன்று வெகு விமரிசையாக தொடங்கியது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஷித் கலந்து கொண்டு புனித நீராடினார்.

    [பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் ஏற்றம்.. உச்சத்தை தொட்டது!]

    புஷ்கர விழா

    புஷ்கர விழா

    குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ராசிக்கு உரிய நதிக்கு புஷ்கர விழா நடத்தப்படுவது வழக்கம்.

    தாமிரவருணி நதி

    தாமிரவருணி நதி

    அதன்படி, இந்த ஆண்டு குருபகவான் துலாம் ராசியிலிருந்து தாமிரவருணி நதிக்கான விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாவதை தொடர்ந்து 144 ஆண்டுகளுக்கு பின் தாமிரவருணி நதியில் மஹா புஷ்கரம் விழா நடத்தப்பட உள்ளது.

    சிறப்பு பூஜைகள்

    சிறப்பு பூஜைகள்

    சிருங்கேரி, காஞ்சி மடங்கள், துறவிகள் சங்கம், தாமிரபரணி புஷ்கர ஒருங்கிணைப்பு குழு உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் பூஜைகள், சிறப்பு தாமிரபரணிக்கு ஆரத்தி வழிபாடுகள் நடத்த‌ ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளன.

    பாதுகாப்பு ஏற்பாடுகள்

    பாதுகாப்பு ஏற்பாடுகள்

    அதேபோல கன்னியாகுமரி மாவட்டத்தில், தாமிரவருணி தீர்த்தப்படித்துறையிலும் இவ்விழா நடைபெறுகிறது. இன்று முதல் துவங்கி வரும் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. புஷ்கர விழாவில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருந்து லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

     ஆளுநர் பங்கேற்பு

    ஆளுநர் பங்கேற்பு

    இந்த மகா புஷ்கர விழாவில் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்தும் கலந்து கொண்டார். பாபநாசம் அருகே ராஜராஜேஸ்வரி திருச்சி சுவாமிகள் மண்டபம் படித்துறையில், தாமிரபரணி ஆற்றில் அவர் புனித நீராடினார் பன்வாரிலால். தாமிரபரணி ஆற்றின் 143 படித்துறைகளிலும் தற்போது பூஜைகள் நடக்கின்றன. இதில் 29 படித்துறைகளில் பக்தர்கள் புனித நீராடுகின்றனர்.

    {document1}

    English summary
    Nellai and Thoothukudi districts Pushkaram Starts Today
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X