For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'அஞ்சா நெஞ்சனுடன்' கை கோர்த்த 'வன்முறை நாயகன்' ரித்தீஷ், 'மாவீரன்' நெப்போலியன்....!

Google Oneindia Tamil News

சென்னை: மு.க.அழகிரி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார். அவருடன் கட்சியினர் எந்தவிதமான தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று திமுக அறிவித்துள்ள நிலையில், 3 எம்.பிக்கள் அவரைப் போய் பார்த்து பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளதால், அந்த மூன்று எம்.பிக்களும் கட்சியை விட்டு சஸ்பெண்ட் செய்யப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆனால் மூன்று பேரும் எம்.பிக்களாக இருப்பதால் இப்போதைக்கு அவர்கள் மீது நடவடிக்கை பாயாது என்ற பேச்சும் அடிபடுகிறது.

மூன்று பேருமே அழகிரியைச் சந்தித்துப் பேசியதோடு, இறுதி வரை உடன் நிற்போம், பின்வாங்க மாட்டோம் என்றும் உறுதிபடக் கூறியுள்ளதால் திமுக தரப்பு சற்றே அதிர்ந்து போய் நிற்கிறது.

ஜே.கே.ரித்தீஷ்

ஜே.கே.ரித்தீஷ்

இந்த மூன்று பேரில் ரித்தீஷ் குறித்து பல மல்ட்டி பேஜ் கட்டுரைகள் போடலாம். காரணம் அப்படிப்பட்ட கலவரப் பின்னணி கொண்டவர் இந்த ரித்தீஷ்.

எப்பப் பார்த்தாலும் அடிதடி!

எப்பப் பார்த்தாலும் அடிதடி!

எப்பப் பார்த்தாலும் அடிதடி ரகளை என்றுதான் ரித்தீஷ் மீ்து கடந்த பல மாதங்களாக புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.

தாத்தாவுடன் மோதல்

தாத்தாவுடன் மோதல்

ரித்தீஷுக்கு ராமநாதபுரம் மாவட்ட திமுக மாவட்டச் செயலாளர் சுப. தங்கவேலன் தாத்தா முறை. இவரால்தான் திமுகவுக்கே வந்தார் ரித்தீஷ். ஆனால் எப்போது பார்த்தாலும் தங்கவேலனுடன் மோதி வருகிறார் தற்போது.

ரத்தக்களறி

ரத்தக்களறி

சில மாதங்களுக்கு முன்பு தங்கவேலன் கோஷ்டியினருடன், ரித்தீஷ் கோஷ்டியினர் மோதியதில் பெரும் ரத்தக்களறியாகி விட்டது.

தேவர் குருபூஜை

தேவர் குருபூஜை

முன்பொருமுறை தேவர் குருபூஜை சமயத்தின்போதும் பெரும் வன்முறையில் ரித்தீஷ் கோஷ்டி ஈடுபடுவே பெரும் மோதலாகிப் போனது.

வன்முறை வரலாறு

வன்முறை வரலாறு

நாயகன் என்ற பெயரில் படத்தில் நடித்துள்ள ஜே.கே.ரித்தீஷ் என்றாலே வன்முறை நாயகன் என்றுதான் அனைவரும் கூறுகிறார்கள். அப்படிப்பட்ட பிரளய வரலாற்றுப் பின்னணி கொண்டவர் ரித்தீஷ். இவர் இப்போது மு.க.அழகிரி பின்னால் அணிவகுத்துள்ளார்.

நெப்போலியன்

நெப்போலியன்

முன்னாள் மத்திய அமைச்சரான நெப்போலியன் திடீரென மு.க.அழகிரி பக்கம் வந்தவர். முன்பு தனது தாய்மாமா கே.என். நேருவுடன் இணக்கமாக இருந்தபோது மு.க.ஸ்டாலின் பக்கம்தான் சாய்ந்திருந்தார்.

மாமாவுடன் மோதல்

மாமாவுடன் மோதல்

பின்னர் கே.என். நேருவுடன் இவருக்கு கருத்துப் பூசல் ஏற்பட்டது. இதனால் நேருவை விட்டு விலகினார். அப்படியே ஸ்டாலினிடமிருந்து அழகிரி பக்கம் வந்து விட்டார்.

தீவிர ஆதரவாளர்

தீவிர ஆதரவாளர்

மு.க.அழகிரிக்குத் தீவிரமான ஆதரவாளராக நெப்போலியன் திகழ்ந்து வருகிறார். அழகிரி மத்திய அமைச்சராக இருந்தபோது டெல்லியில் எப்போதும் அழகிரியுடனேயே இருந்து வந்தார் நெப்போலியன்.

கே.பி.ராமலிங்கம்

கே.பி.ராமலிங்கம்

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் கே.பி.ராமலிங்கம். இவர் ஒரு காலத்தில் அதிமுகவில் இருந்தவர். ராசிபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் 2 முறை எம்.எல்.ஏவாக தேர்வாகியுள்ளார்.

ராஜ்யசபா எம்.பி.

ராஜ்யசபா எம்.பி.

தற்போது ராஜ்யசபா எம்.பியாக இருக்கிறார். முன்பு திருச்செங்கோடு தொகுதியிலிருந்து திமுக சார்பில் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இவர் எப்படி இப்படி...!

இவர் எப்படி இப்படி...!

ராமலிங்கம் திமுக தலைமையுடன் நல்ல நெருக்கத்தில் இருந்து வந்தவர்தான். ஆனால் அவர் எப்படி அழகிரி பக்கம் வந்தார் என்பதுதான் பலருக்குப் புரியவில்லை.

நீக்கப்படுவார்களா...?

நீக்கப்படுவார்களா...?

இப்போது கேள்வி என்னவென்றால், அழகிரியை கட்சியை விட்டு நீக்கியபோது யாரும் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று கட்சித் தலைமை உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த மூன்று பேரும் தொடர்பு மட்டுமல்லாமல் இறுதி வரை துணை நிற்போம் என்றும் கூறியுள்ளனர். எனவே இவர்கள் மூ்ன்று பேரும் சஸ்பெண்ட் செய்யப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

English summary
Actors Nepoleon, Ritheesh have joined sacked DMK leader M K Azhagiri as expected. But the new entrant is K P Ramalingam, a DMK Rajya sabha MP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X