For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கானல் நீர் கொண்டு இனி தாகம் தீர்ப்போமா?.. டுவிட்டரில் டிரென்டாகும் #தமிழகம்காக்க_மரம்வளர்ப்போம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறையை போக்கவும் மழையை பெறவும் மரம் வளர்ப்போம் என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டாப் டிரென்டிங்கில் உள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்ததால் நீர் நிலைகள் வறண்டு போய் எங்கு பார்த்தாலும் தண்ணீர் பஞ்சம் தலை தூக்கி வருகிறது. மக்கள் மழையில்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

பெரும்பாலான இடங்களில் மரங்கள் வெட்டப்படுவதும் அவற்றை வளர்க்க மக்கள் ஆர்வம் காட்டாததும் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் தண்ணீர் தேவைக்காகவும் தாகத்தில் உள்ள தமிழகத்தை காக்கவும் மரம் வளர்ப்போம் என்பதை வலியுறுத்தும் #தமிழகம்காக்க_மரம்வளர்ப்போம் என்ற ஹேஷ்டேக் பிரபலமாகி வருகிறது.

மக்கள் இயக்கம்

தமிழகம் காக்க மரம் வளர்ப்போம் என்பது இப்போது தேவை. இதைத்தான் நான் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் செய்து வருகிறேன். அனைவரும் மரம் வளர்க்க வேண்டும். இது மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

மரம் வளர்த்திடுங்கள்

மரம் வளர்த்திடுங்கள், மரங்களை வெட்டாதீர்கள். மரங்களை வளர்த்தால் அது நமது வாழ்வை காத்திடும். நமது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இல்லாவிட்டால் காலத்துக்கும் தண்ணீரை தேடி அலைய வேண்டியதுதான்.

இளமையும் இல்லை

இளமையும் இல்லை
இலைகளும் இல்லை
இதயம் இளைப்பாற
மரங்களும் இல்லை
மனிதன் சுயநலம் நிலைத்திட
மரம் கொன்றானோ?!
ஒருவேளை கானல் நீர் கொண்டு
இனி வரும் காலம்
அவன் தாகம் தீர்ப்பானோ?

தூர்வார்தல்

தமிழகம் முழுவதும் ஏரி குளங்கள் தூர் வாரப்படுகிறது அதில் நீர் நிறைய மழை வேண்டும் மழை பெற மரம் வேண்டும் மரம் நடுவோம் மழை பெறுவோம்.

English summary
Netisans created a Hashtag to create social awareness on planting a tree.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X