For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தப்பு தப்பா பதிவு செய்த எச் ராஜா... நெட்டிசன்களிடம் கொட்டு வாங்கிய அவலம்

1966-இல் வாஜ்பாய் ஆட்சி அமைத்ததாக தவறான கருத்து கூறி நெட்டிசன்களிடம் எச் ராஜா வாங்கிக் கட்டிக் கொண்டார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ஹெச்.ராஜா நெட்டிசன்களிடம் கொட்டு வாங்கிய அவலம்!

    சென்னை: 1966-இல் வாஜ்பாய் ஆட்சி அமைத்ததாக தவறான பதிவை டுவிட்டரில் போட்டுவிட்டு அதற்காக நெட்டிசன்களிடம் எச் ராஜா வாங்கிக் கட்டிக் கொண்டார்.

    கர்நாடக தேர்தல் முடிவுகளில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை. இதனால் காங்கிரஸ்- ஜேடிஎஸ் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது. அதுபோல் பாஜகவும் 108 இடங்களை வைத்துக் கொண்டு பெரும்பான்மை என்று கூறி ஆட்சி அமைக்க கோருகிறது.

    ஆனால் கோவா, மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற போதிலும், மற்ற கட்சிகளுடன் கைகோத்துக் கொண்டு ஆட்சியை பிடித்தது. பின்வாசல் வழியாக ஆட்சியை பிடித்த பாஜக, தற்போது அதே பார்முலாவை பயன்படுத்தும் காங்கிரஸை மட்டும் குறை கூறுகிறது.

    வரிந்து கட்டிய ராஜா

    வரிந்து கட்டிய ராஜா

    எச் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், 1966 ல் தனிப்பெரும் கட்சியின் தலைவர் என்ற முறையில் வாஜ்பாய் அவர்களை ஆட்சி அமைக்க ஜனாதிபதி அழைத்தது போல் கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சியின் தலைவர் BSY அவர்கள் ஆட்சி் அமைக்க அழைக்கப்பட வேண்டும் என்பதே சட்டத்தின் நிலை என்று குறிப்பிட்டுள்ளார்.

    அட்மின் கன்பூஸ்

    1966ஆ? இல்ல 1996ஆ? பாவம் அட்மினே கன்பூஸ் ஆயிட்டாரு?

    குமாரசாமி நிலை

    பேட்ச் டாப்பர் எடுத்தும் எடியூரப்பாவின் நிலை குறித்தும் ஜஸ்ட் பாஸ் ஆன குமாரசாமியின் நிலை குறித்தும் எடுத்துரைத்திருக்கிறார் இந்த வலைஞர்.

    இன்னைக்கு சட்டம் பேசுறாரு

    என்ன துரை இன்னைக்கி சட்டம்லா பேசுது..

    ராஜா சார் மானத்தை வாங்குற

    1966 ம் ஆண்டா? அடேய் அட்மின் ஏண்டா ராஜா சார் மானத்தை வாங்குற

    பாஜக கட்சி உதயமாகவில்லை

    1966 ல் பாஜக என்ற கட்சியே உதயமாகவில்லைன்னு அட்மினுக்கு யாராவது சொல்லுங்களேன்.

    ஞாபகம் இருக்கா

    சட்டத்தை உனக்கு ஏத்த மாதிரி மாத்திக்குவ. மணிப்பூர், கோவா, மேகாலயா மற்றும் பீகார் நியாபகம் இருக்கா?

    குறுக்கு வழி தேடுங்க

    கண்டிப்பா அழைப்பு உண்டு சார்,
    ஆனா உள்ள வரதுக்கு வழி பார்த்திங்கனா கோவா, மேகாலயா மணிப்பூர்னு சுத்தினு வருது சார், காரி காரி துப்புவானுங்க சார்,
    குறுக்கு வழி எதாவது தேடுங்க சார்

    சொல்லவே இல்ல

    என்னது 1966 ல் வாஜ்பாய் தனிப்பெரும் கட்சியின் தலைவரா.?? சொல்லவே இல்ல.

    மற்றவர்களுக்கு ஒரு நியாயம்

    இதேபோல் ஏன் காங்கிரஸை கோவா மற்றும் மணிப்பூரில் அழைக்கவில்லை. உங்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா??

    English summary
    Netisans shares their comment about H.Raja who gives wrong information about Vajpayee.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X