For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

500லி சின்டெக்ஸ் டேங்க் உடைஞ்சாலே இதை விட அதிக தண்ணி வருமே.. நெட்டிசன்கள் கலகல!!

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: வைகை அணையிலிருந்து கடந்த 20-ஆம் தேதி பாசனத்துக்கும் குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் வைகை ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் இதுவரை மானாமதுரை கூட வரவில்லை என்று நெட்டிசன்கள் நக்கலடித்து வருகின்றனர். வழியெங்கும் ஆக்கிரமிப்பு என்பதை சொல்லாமல் சொல்லும் சில டுவிட்டர் கமென்ட்டுகள் வாசகர்களின் பார்வைக்காக...

பாதுகாப்பு

கேரளாவில் வெள்ளம் வந்து பாதிப்பு ஏற்படுவதால் தங்களது கேரள பெண்களை எதிர்காலத்தில் எவ்வளவு பெரிய வெள்ளம் வந்தாலும் அதை போடா வெண்ணை என்ற அளவுக்கு எதிர்கொள்ளும் தமிழ் இளைஞர்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்குமாறும் முக்கியமாக 50 நாள் அடை மழை பெய்தாலும் தண்ணி வந்து நிரம்பாத வைகையை கொண்ட பரமக்குடிக்கார பசங்களுக்கு கட்டி கொடுத்தால் இன்னும் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று கூறிக் கொண்டு விடைபெறுகிறோம் நன்றி.

வா வந்து தொலை

வா வந்து தொலை

மானாமதுரையே தாண்டல

5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது. இதையடுத்து தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை.

நீ ஏதோ ராம்நாட் கண்மாய் வரை போவீனு எச்சரிக்கையெல்லாம் விடுறாங்க... ஆனா நீ நம்ம மானாமதுரையை கூட தாண்டமாட்டேனு எங்களுக்குதான்ப்பா தெரியும்.

அதிகமா தண்ணி ஓடும்

அதிகமா தண்ணி ஓடும்

வைகை ஆத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. 500 லிட்டரு சின்டெக்ஸ் டேங்க் நெறஞ்சு வழிஞ்சா கூட இதவிட அதிகமா தண்ணி ஓடும்.

நீங்க யாரு

நீங்க யாரு

எல்லாரும் மழைய பாத்து பயப்படுறாங்க. ஆனா அந்த மழையே உங்கள பாத்து பயப்படுதே. நீங்க யாரு... சொல்லுங்க நீங்க யாரு... ராம்நாடு...

English summary
Netisans trolls the Vaigai dam which opened on Aug 20 but it not reaches its surrounding areas too.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X