For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரயில் பயணிகளை காவு வாங்கும் பக்கவாட்டு சுவர்.. இது யார் தவறு? கொதிக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை பரங்கிமலை ரயில் நிலைய பக்கவாட்டு சுவரில் மோதி 5 இளைஞர்கள் பலியான சம்பவத்திற்கு நெட்டிசன்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையில் ரயில் மின்கம்பி விழுந்து 7 பேர் காயம், இருவர் பலி!

    சென்னை: பரங்கிமலை ரயில் நிலைய பக்கவாட்டு சுவரில் மோதி 5 இளைஞர்கள் பலியான சம்பவத்திற்கு நெட்டிசன்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    சென்னை மாம்பலத்தில் புறநகர் ரயில்கள் செல்லும் ட்ராக்கில் உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்தது. இதனால் லோக்கல் ட்ரெயின்கள் விரைவு ரயில்கள் செல்லும் பாதையில் மாற்றி விடப்பட்டன.

    ஏற்கனவே ரயில்கள் தாமதமானதால் கடற்கரை - திருமால்பூர் ரயிலில் கூட்டம் அலைமோதியது. இதனால் பயணிகள் படிக்கட்டில் தொங்கியவாறு பயணிக்கும் நிலை ஏற்பட்டது.

    மாணவர்கள் உட்பட 5 பேர்

    மாணவர்கள் உட்பட 5 பேர்

    சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தை தாண்டிய போது ரயில் நிலைய பக்கவாட்டு சுவரில் படியில் தொங்கிய பயணிகள் மோதினர். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர்.

    நெட்டிசன்கள் கொதிப்பு

    நெட்டிசன்கள் கொதிப்பு

    ஏற்கனவே பல முறை அந்த பக்கவாட்டு சுவரால் பல உயிர்கள் பலியாகியுள்ள நிலையில் ரயில்வேதுறை இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததே இதற்கு காரணம் என நெட்டிசன்கள் கொதித்துள்ளனர்.

    விரைவு ரயில்கள் இயக்கப்படும்

    விரைவு ரயில்கள் இயக்கப்படும்

    மேலும் விரைவு ரயில்கள் இயக்கப்படும் பாதையில் மக்கள் கூட்டம் மிகுந்த லோக்கல் ட்ரெயின்கள் இயக்கப்பட்டதும் 5 உயிர்கள் பறிபோக காரணம் என குற்றம்சாட்டியுள்ளனர்.

    இதற்கு யார் பொறுப்பு?

    பரங்கிமலை இரயில் நிலையத்தில் விபத்து.5 பேர் மரணம்,சிலர் காயம்.நேற்று இரவும் அதே இடத்தில் இருவர் அதே போல் மரணம்.இது யார் தவறு? யார் இதற்கு பொறுப்பு?

    நடவடிக்கை எடுக்க வேண்டும்

    சென்னை பரங்கிமலை ரயில் நிலைய விபத்து குறித்து ஆழ்ந்த அனுதாபங்கள். சாவு எண்ணிக்கை அதிகரிப்பது வேதனை அளிக்கிறது. அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாள் சரியில்லை

    நான் அங்குதான் அப்போது இருந்தேன். திருமால்பூர் இரயில்.பரங்கிமலை மின்சார ரயிலில் நடந்த விபத்து. படியில் தொங்கியவர்கள் பரிதாப மரணம். பாடம் கற்காத இளைஞர்கள்.பரிதாபம். என் வழக்கமான மெட்ரோ பயணம் அந்த துயர சம்பவத்தின் ரத்த நினைவுகளோடு. நாள் தொடங்கிய விதம் சரியில்லை.

    இடித்து தள்ளுங்கள்

    ஒன்று செங்கல்பட்டு மார்க்கத்தில் அதிக ரயில்களை பீக் ஹவர்களில் இயக்குங்கள் அல்லது பயன்பாட்டில் இல்லாத நடைமேடைகளில் எழுப்பப்பட்ட உயிர்ப்பலி வாங்கும் சுவர்களை இடித்து தள்ளுங்கள். வருடத்திற்கு 10 உயிர்களாவது பரங்கிமலை ரயில் நிலையத்தில் காவு வாங்கப்படுகிறது

    ஒரு ஆள் கூட போக முடியாது

    இந்த பரங்கிமலை ஸ்டேஷன்ல 3&4 பிளாட்பார்ம்ல ட்ரெயினுக்கும் காம்பவுண்டு சுவருக்கும் இடையில் 1 1/2 அடி இடைவெளி தான் இருக்கும். அந்த பிளாட்பார்ம்ல exp & fast train மட்டும் தான் போகும். ஒரு ஆள் தொங்கிட்டு போனா கூட அடிபட்டுவிடும் என்று யாரும் பாஸ்ட் ட்ரெயின்ல வெளியே தொங்கிட்டு போக மாட்டாங்க..

    English summary
    Netizens angry about the rail accident in Chennai Mount. Five dead after falling from rail in chennai mount station.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X