For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாசா, சீனா நிறைய முறை தோற்கத்தான் செய்தது.. நீங்க சாதிச்சிட்டீங்க.. இஸ்ரோவுக்கு நெட்டிசன்கள் ஆதரவு

Google Oneindia Tamil News

Recommended Video

    கண்ணீர் மல்கிய இஸ்ரோ தலைவர் சிவன்.. வாரி அணைத்து, மோடி ஆறுதல்

    சென்னை: சந்திரயான் 2, லேண்டர் விஞ்ஞானிகளுடனான தொடர்பை இழந்திருக்கலாம், ஆனால், இந்தியர்கள் தங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. மிக குறைந்த செலவில், இந்திய விஞ்ஞானிகள் செய்த இந்த சாதனையை அவர்கள் போற்றி புகழ்கிறார்கள்.

    லேண்டர்தான் தொடர்பை இழந்துள்ளதே தவிர, சந்திரயான் 2 ஆர்பிட்டர், சிறப்பாக பணியாற்றிக் கொண்டுதான் இருக்கிறது. எனவே இது 95 சதவீத வெற்றிதான். ஆர்பிட்டர் இன்னும் ஓராண்டுக்கு ஆய்வை மேற்கொள்ளும்.

    மேலும், நாசா அல்லது சீன விண்வெளி ஆய்வு மையம், தனது முதல் முயற்சிகளில் தோல்வியைதான் சந்தித்துள்ளது. நாசா 3 முறை, சீனா 5 முறை தோற்றுதான் நிலவில் தரையிறங்க முடிந்தது. இதையெல்லாம் சுட்டிக் காட்டி இஸ்ரோவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் நெட்டிசன்கள்.

    சந்திரயான் லேண்டருடன் தொடர்பை இழந்ததும் என்ன சொன்னார் சிவன்? விஞ்ஞானிகள் அறையில் நடந்தது இதுதான்!சந்திரயான் லேண்டருடன் தொடர்பை இழந்ததும் என்ன சொன்னார் சிவன்? விஞ்ஞானிகள் அறையில் நடந்தது இதுதான்!

    நாசா

    நாசா, சீனா உள்ளிட்ட நாடுகள் தங்கள் நிலவு ஆய்வு முயற்சிகளில் தோல்வியடைந்த வரலாற்றை சொல்கிறார் இந்த நெட்டிசன். ஆனால் இந்த பட்டியல்படி நாசா 10 முறை தோற்கவில்லை, 3 முறை தோற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    இஸ்ரோ வெற்றி

    இரவு, அதிகாலை வரை சந்திரயான் 2 லேண்டிங்கிற்காக விழித்து இருந்தீர்கள் அல்லவா? கிரிக்கெட் அல்லது சினிமாவுக்காக இல்லாமல், விஞ்ஞானிகளுக்காக நீங்கள் விழித்திருந்ததே இஸ்ரோவின் வெற்றி என்கிறார் இந்த நெட்டிசன்.

    இறுதி நொடி

    2019ம் ஆண்டு ரொம்ப கொடூரமானது. நல்ல முயற்சி செய்தும் இறுதி நிலையில் வெற்றி வாய்ப்பை தவற விட்டுள்ளோம் என்று உலக கோப்பை கிரிக்கெட்டில், தோனி ரன் அவுட்டானதையும், இஸ்ரோ லேண்டர் நிலவுக்கு 2.1 கி.மீ தொலைவில் தொடர்பை இழந்ததையும் ஒப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

    ஆர்பிட்டர்

    லேண்டர்தான் தொடர்பை இழந்துள்ளதே தவிர, சந்திரயான் 2 ஆர்பிட்டர், சிறப்பாக பணியாற்றிக் கொண்டுதான் இருக்கிறது. ஆர்பிட்டர் இன்னும் ஓராண்டுக்கு ஆய்வை மேற்கொள்ளும் என்று பெருமிதம் கொள்கிறார் இந்த நெட்டிசன்.

    வாழ்த்துக்கள் சிவன்

    இவர் விவசாயியின் மகன். அவர் நாசாவை தேர்வு செய்யவில்லை. அவர் இஸ்ரோவில் பணிபுரிகிறார். ஒவ்வொரு இந்தியனும் அவரைப் பற்றி பெருமிதம் கொள்கிறான். அவர்தான் சிவன்.

    English summary
    Netizens praising ISRO as 95% of Chandrayaan 2 Safe as Orbiter Will Keep Circling Moon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X