For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாளை ஆடிப்பெருக்கு! இந்த வருஷம் காவேரில தண்ணி வேற! கரையோரம்லாம் சும்மா ஜேஜேன்னு இருக்கும்!

நாளை ஆடிப்பெருக்கு கொண்டாடப்படவுள்ள நிலையில் அதுகுறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: நாளை ஆடிப்பெருக்கு கொண்டாடப்படவுள்ள நிலையில் அதுகுறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ஆடிப்பெருக்கு விழா ஆடிமாதம் 18ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

புது மண தம்பதிகள், சுமங்கலி பெண்கள் நீர்நிலைகளில் வழிபாடு செய்வார்கள். இளம் பெண்கள் மனதுக்கு பிடித்த வரன் அமைய வேண்டி வழிபாடு நடத்துவார்கள். கடந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு காவிரியில் இந்த ஆண்டு தண்ணீர் கரைபுரண்டோடுகிறது.

இதனால் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா காவிரி டெல்டா மாவட்டங்களில் களைகட்டும். இந்நிலையில் ஆடிப்பெருக்கு குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ஜேஜேன்னு இருக்கும்

ஆடிப்பெருக்கு!! இந்த வருஷம் காவேரில தண்ணி வேற! கரையோரம்லாம் சும்மா ஜேஜேன்னு இருக்கும்

கரை புரண்டு ஓடுது

ஆடிபெருக்கு ... ரொம்ப நாளைக்கு அப்புறம் கரை புரண்டு ஓடுது

விளையாடியது மகிழ்ச்சி

ஆடி பெருக்கு (ஆடி18) சிறுவயதில் பாட்டியுடன் நீர் நிலைக்கு குறிப்பாக கிணற்றடிக்கு சென்று மஞ்சள் கயிறு பூ பழம்,மற்றும் தேங்காய் பச்சையரிசி வெள்ளம் எள்ளு கலந்து கௌரியை வழிபட்டு பிரசாதம் உண்டு நீரில் விளையாடியது மகிழ்ச்சி,
(இன்றோ நகரத்தில் கிணறை பார்ப்பதே அரிதாக உள்ளது),

ஹேப்பி ஆடி பெருக்கு

ஹேப்பி ஆடி பெருக்கு...
ஏதாவது சொல்வோம்..

தமிழினத்தின் அடையாளம்

ஆடி 18 பெருவிழா
என்பது தனி மனிதருக்கு சொந்தமானது அல்ல
தமிழினத்தின் அடையாளம்

ஒரே குழப்பமா இருக்கு

நாளைக்கு ஆடி 18 ஆம் , லீவு விட்றாய்களா இல்லாயானு ஒரே குழப்பமா இருக்கு

English summary
Netizens sharing their views about Adi perukku. Adi Perukku is celebrating tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X