For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்ணின் முந்தானையை இழுக்கப் பார்க்கும் மத்திய அரசு- கொதிக்கும் நெட்டிசன்ஸ்

மத்திய அரசின் ரூபாய் நோட்டுகள் மீதான சமூகவலைதள வாசிகளின் விமர்சனங்களின் தொகுப்பு.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ரூபாய் நோட்டு செல்லாதது; வங்கிக்குப் போனால் மை வைப்பது போன்ற மத்திய அரசின் அறிவிப்புகள் பொதுமக்களை பயங்கரமாக கொந்தளிக்க வைத்துள்ளது. ஃபேஸ்புக்கில் சில பதிவர்கள் போட்டுள்ள ஆக்ரோஷமான பதிவுகளைப் பாருங்கள்:

வரம்பு மீறி சீண்டிப்பார்க்கும் மோடி அரசு,,

வரம்பு மீறி சீண்டிப்பார்க்கும் மோடி அரசு,,

''நான் உழைத்து சம்பாதித்தஎன் பணத்தை வங்கியிலிருந்து எடுக்க என் கையில் ஏன் மை வைக்கவேண்டும்?.''
பணத்திற்காக வரும் மக்களை கிட்டத்தட்ட அயோக்கிய பயல்கள் என நினைக்கிறோர்கள் போலும்.விட்டால் கை ரேகை, பயண திட்டங்கள், அன்றாட செலவின வகையாறாக்களையும் பூர்த்தி செய்ய விண்ணப்பம் கொடுத்துவிட்டாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.
அனைவரும் வரவேற்கும் நடவடிக்கை என்ற ஒரே அஸ்திரத்தை வைத்துக்கொண்டு, மத்திய அரசு பொதுமக்களின் சூடு சுரணையை சீண்டிப்பார்க்க ஆரம்பித்துள்ளது.
பச்சையாக சொன்னால் ஆபத்தில் கைகொடுக்கிறேன் என்று சொல்லி பெண்ணின் முந்தானையை இழுக்கப்பார்க்கிறது
பாமரன் பாஷையில் மத்திய அரசுக்கு சொன்னால்,, ஒழுங்கா வூடு போய் சேரமாட்டானுங்கபோல..

விரலை வெட்டிவிட்டு....

விரலை வெட்டிவிட்டு....

கரும்புள்ளி
.........
வங்கியில் பணம் எடுப்பவர்கள்
மீண்டும் வராமலிருக்க
கையில் இனி
அடையாள மை வைக்கப்படும்
என்கிறார்
நவீன தேசபிதா
ஏன் அத்தோடு விட்டீர்கள்
நெற்றியில் கரும்புள்ளி
செம்புள்ளி குத்தி அனுப்புங்கள்
பாதி தலையை
மொட்டையடித்து அனுப்புங்கள்
ஒரு காதை
அறுத்து அனுப்புங்கள்
உங்கள் தேசபக்திக்காக
இதைக்கூட பொறுக்க மாட்டோமா
ஒருவிரலில் நீங்கள்
மைவைத்தபிறகு
எனக்கு மீண்டும் நூறு ரூபாய்
தேவைப்பட்டால்
அந்த விரலை வெட்டியெறிந்துவிட்டு
உங்கள் சன்னிநாதனத்தில்
வந்து நிற்கிறேன்
15.11.2016
பகல் 12.35
மனுஷ்ய புத்திரன்

பெட்ரூமூக்குள் வருகிறான் புருஷன்

பெட்ரூமூக்குள் வருகிறான் புருஷன்

''வாங்கறவனே திரும்ப திரும்ப வந்து வாங்கறானாம்..அதான் மை வைக்கறாங்களாம்..''
அவன் அவனோட நல்ல நோட்டுகளை கொடுத்துட்டுத்துட்டானப்ப மாத்தறதுக்கு அடிக்கடி படையெடுக்கிறான்..கள்ளநோட்டுக்களோடா வர்றான்?
''ஐய்யோ, என் வீட்டுக்காரன் திரும்ப திரும்ப என் பெட்ரூமுக்கு வர்றான்னே'' பொண்டாட்டி கூப்பாடு போடற மாதிரி இருக்கு..

பணமே இல்லை...

பணமே இல்லை...

மத்திய அரசின் ‘மை' உத்தரவு வங்கிகளிடம் போதுமான பணம் இல்லை என்பதையே சூசகமாகக் காட்டுகிறது. வீட்டில் பிணத்தைப் போட்டுவிட்டு வங்கி வாசலில் நிற்கிறார்கள். கடைசி காரியத்துக்கு பணம் திரட்ட யார், யாரோ அலைகிறார்கள். மருத்துவமனையில் சேர்த்துவிட்டு ஒரு குரூப் பணம் திரட்ட அலைகிறது. மற்றொரு குரூப் நோட்டு மாற்ற அலைகிறது. அவர்களில் விரலில் மை வைக்கிறேன், மயிர் வைக்கிறேன் என்றால் என்ன அர்த்தம்?

சயனைடா அது...

சயனைடா அது...

கையில மைதானே தடவுறாங்க...சயனடையா தடவினாங்க? தேசத்துக்காக இந்த தியாகம் கூட செய்யாட்டி எப்படி?

--டேஷ்பக்தாஸ்

எதிர்வினை

எதிர்வினை

தேர்தலில் நாம் வைத்துக் கொண்ட ஒவ்வொரு "மை"க்கும் ஒரு எதிர்"மை" உண்டு !

பயனின்மை

பயனின்மை

உண் - மை
நேர் - மை
வாய் - மை
பொறு - மை
நிலையா - மை
பயனின் - மை
இயலா - மை
ஆ - மை
'மை'

English summary
Netizens slammed in FB for the Centre's Currency Ban.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X