For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனிமே தான்டா ஆட்டம் ஆரம்பம்.. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சமூக வலைதளங்களில் கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு.. போராட்ட களத்தில் கல்லூரி மாணவர்கள்- வீடியோ

    தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.

    தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையால் அப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு, மக்களுக்கும் கொடிய நோய்கள் உருவாவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கல்லூரி மாணவர்களும் பங்கேற்றுள்ளனர். இதனால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சமூக வலைதளங்களிலும் போராட்டத்திற்கு ஆதரவு எழுந்துள்ளது.

    ஆட்டம் ஆரம்பம்

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிரான போராட்டம் தீவிரம், போராட்ட களத்தில் மாணவர்களும் இறங்கியுள்ளனர்
    இனிமே தான் டா ஆட்டம் ஆரம்பம்.. என்கிறார் இந்த நெட்டிசன்

    களத்தில் கல்லூரி மாணவர்கள்

    அனைவருக்கும் பகிரவும்
    ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு.. போராட்ட களத்தில் குதித்த கல்லூரி மாணவர்கள்

    நாளை

    இன்று
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டம்.
    நாளை
    நியூட்ரினோ எதிர்ப்பு போராட்டம்..
    சாகர்மாளா எதிர்ப்பு போராட்டம்..
    வெடிக்கும் போராட்டம் வெடிக்கும்..

    தடை செய்

    ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்.. என்கிறார் இந்த வலைஞர்

    ஓடப்போகும் ஸ்டெர்லைட்!!!

    டார்ச்லைட்டிடம்
    தோற்று ஓடப்போகும்
    ஸ்டெர்லைட்!!!

    உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட்

    தூத்துக்குடியை சுடுகாடாக மாற்ற துடிக்கும்
    உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை
    அகற்று!!!

    2வது பெரிய உருக்காலை

    'உலகின் மிகப்பெரிய தாமிர உருக்காலை சீனாவில் உள்ளது. தற்போது ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு பின்னர், உலகின் இரண்டாவது பெரிய உருக்காலையாக இந்த ஆலை செயல்படுமாம்
    இதை தடுக்க வேண்டும்...

    English summary
    Netizens supports Protest against sterlite. Students also protesting against sterlite.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X