For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லோக்சபாவில்தானே கோஷம் போடுவீங்க.. இங்க எப்படி.. டிவிட்டரில் டிரெண்ட்டாகும் 'தமிழ் வாழ்க'

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழ் வாழ்க! தமிழக எம்.பிக்கள் லோக்சபாவில் தாய் மொழியில் பதவியேற்பு- வீடியோ

    சென்னை: 'தமிழ் வாழ்க' என்ற வார்த்தையை, டிவிட்டரில், நெட்டிசன்கள், டிரெண்ட் செய்து வருகிறார்கள். தேசிய அளவில் அது நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்தியது.

    லோக்சபாவில் இன்று தமிழக எம்பிக்கள் பதவியேற்றனர். அப்போது, பெரும்பாலான திமுக கூட்டணி எம்பிக்கள், தங்களது பதவியேற்பைத் தொடர்ந்து, தமிழ் வாழ்க என தெரிவித்தனர்.

    இவ்வாறு எம்பிக்கள் கூறியபோது, பாஜக எம்பிக்கள், பாரத் மாதா கி ஜே என்று கோஷமிட்டனர். இதனால் தமிழ் நெட்டிசன்கள், இவ்வாறு ஒரு டேக் ஆரம்பித்து டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

    சூடு ஏறுது

    தமிழ் வாழ்க என்ற கோஷத்தை கேட்டதும், உடலில் சூடேறி, அதை தணிக்க பாஜகவினர் இப்படி தண்ணீரை ஊற்றிக்கொள்ள வேண்டியதுதான் என்று கிண்டல் செய்கிறது இந்த மீம்.

    கனடா நாடாளுமன்றத்தில் தமிழ்

    கனடா நாட்டு நாடாளுமன்றத்தில் கூட தமிழில் பேசியதற்கு எதிர்ப்பு வரவில்லை என்று கூறி, இந்த வீடியோவை இணைத்துள்ளார் நெட்டிசன் ஒருவர்.

    பெருமைதானே

    தமிழ் வாழ்க என்ற சொல்லுக்கு, எதற்காக பாஜக எம்பிக்கள் பதறுகிறார்கள். இந்தியாவின் 22 அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றான தமிழ் வளர்வது நாட்டின் பெருமிதம்தானே. சமஸ்கிருதம் அல்லது ஹிந்தி வாழ்க என கூறியிருந்தால் இப்படியா எதிர் கோஷம் வந்திருக்கும் என கேட்கிறார் இந்த நெட்டிசன்.

    37 பேர் போதும்

    37 பேர் சேர்ந்து, 303 பேரை ராகிங் செய்துவிட்டனர் என்று, சொல்கிறார் இந்த நெட்டிசன். லோக்சபாவில் தமிழக எம்பிக்கள் பதவியேற்றது இன்றுதான் என்பதால், கல்லூரி முதல் நாளை ஒப்பிடுகிறார் போலும்.

    ஏன் கோபம்

    எதற்கு எனது மொழி உங்களுக்கு எரிச்சலை தருகிறது என்று கேட்கிறார் இந்த நெட்டிசன். நாங்கள் யாருக்குமே எதிரி இல்லை. ஏன் எங்கள் மொழியில் உறுதிமொழி எடுத்தால் நீங்கள் ஆத்திரப்படுகிறீர்கள் என்பதுதான் பெரும்பாலான நெட்டிசன்கள் கேள்வியாக உள்ளது.

    English summary
    Netizens trend Long live Tamil in twitter as Tamilnadu mps takes oath by saying this word.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X