• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்! அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்!! #நா.முத்துக்குமார்

|

சென்னை: மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு சமூகவலைதளங்களில் ரசிகர்கள் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கவிஞர் நா முத்துக்குமார் கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது திடீர் மரணம் திரையுலகினர் மட்டுமின்றி தமிழ் இலக்கியவாதிகள், இசைபிரியர்கள் என அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இயக்குநர் கனவோடு திரைத்துறைக்கு வந்து பாடலாசிரியரான கவிஞர் நா முத்துக்குமார் ஏராளமான விருதுகளை குவித்துள்ளார். அவரது 43வது பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மனதினில் வந்து போகிறாய்

மழை வரும் மாலை நேரத்தில்

மனதினில் வந்து போகிறாய்

விழியினில் ஏனோ ஒரு ஈரம்

சில நேரம் மாயம் செய்தாய்

சில நேரம் காயம் செய்தாய்

மடி மீது தூங்க வைத்தாய்

மறுநாளில் ஏங்க வைத்தாய்

வெயிலா? மழையா? வலியா? சுகமா? எதில் நீ?

~ நா. முத்துக்குமார்

இது தந்தையின் தாலாட்டு

முன்னம் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே

மழைநின்று போனால் என்ன மரம் தூறுதே

வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே

பிள்ளைபோல் இருந்தும் இவள் அன்னையே

இதுபோல் ஆனந்தம் வேறில்லையே❤️

ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு

சுடும் வெயில் கூட அழகு..

நா முத்துக்குமார் சாரின் பாடல்கள் பற்றி கூறுங்கள்..

மழை மட்டுமா அழகு..

சுடும் வெயில் கூட அழகு என்றவன்..

வரிகளால் அழ வைத்துச் சென்றுவிட்டான்.... #நாமுத்துக்குமார்

அதில் ஆயிரம் மழை துளி கூட்டுகிறாய்

உங்கள் உயிர் கொடுக்கும் எழுத்துக்கள் என்றும் மறையா வண்ணம்..

ஆனந்த யாழை மீட்டுகிறாய்

அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்

அன்பெனும் குடையை நீட்டுகிறாய்

அதில் ஆயிரம் மழை துளி கூட்டுகிறாய்

எதார்த்த படைப்பாளி

நா. முத்துக்குமார் வந்த பிறகு

வைரமுத்து காட்டுல சொட்டு நீர் பாசனம். நா முத்து குமார் மறைவுக்கு பிறகு வைர முத்து காட்டில் அடை மழை. ...

எதார்த்த படைப்பாளி.. நா. முத்து குமார்

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு

அழகே அழகே எதுவும் அழகே

அன்பின் விழியில் எல்லாம் அழகே

மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு

மலர் மட்டுமா அழகு விழும் இலை கூட ஒரு அழகு

புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு

நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு

நினைவென்றும் போகாதே வா!

மழைப்பெய்த பள்ளத்தில் தெரிகின்ற நிலவைப் போல

மனசுக்குள் நாம் கொண்ட காதல்...

மழை நின்று போனாலும்

நிலவெங்கு போனாலும்

நினைவென்றும் போகாதே வா!

நான் இசையுடன் தோன்றுவேன்..

இரவு என்ன பகலும் என்ன

இசை மழை தூவட்டும்..

இசை அலையில் மிதந்தபடி

இதயங்கள் நனையட்டும் நனையட்டும் நனையட்டும்..

சிரிக்கின்ற போதிலும்

நீ அழுகின்ற போதிலும்

வழி துணை போலவே

நான் இசையுடன் தோன்றுவேன்..

நான் உங்களுக்காக எப்போதும் இருப்பேன்..

நீங்கள் விட்டுச்சென்ற வரிகள்

கவிதை நாயகன் நா. முத்துக்குமார் அவர்களின் 43 ஆவது பிறந்த தினம்!🎂

நீங்கள் விட்டுச் சென்ற கவிதை வரிகள் என்றும் எங்கள் மனதில் நீங்காது சார்

மழலைகள் ஆவோம்..

செல்போனின் உச்சரிப்பை தவிர்த்து

செம்மண்ணின் உச்சரிப்பை கேட்போம்.

வெறும் காலில் செருப்பின்றி நடந்து

மண்ணோடு பேசிக்கொண்டே போவோம்

மழலைகள் ஆவோம்...

#HBDNaMuthukumar

#நாமுத்துக்குமார்

கொஞ்சம் புரியுமா..

நதியாலே பூக்கும் மரங்களுக்கு

நதி மீது இருக்கும் காதலினை

நதி அறியுமா...

கொஞ்சம் புரியுமா..

கரையோர கனவுகள் எல்லாம்

உனக்காக ஒரு பெண் இருந்து விட்டால்

அவள் கூட உன்னையும் விரும்பி விட்டால்

நீ பறக்கலாம்..

உன்னை மறக்கலாம்..

பிறக்காத கனவுகள் பிறக்கும்

#HBDNaMuthukumar

#நாமுத்துக்குமார்

ஏதும் எழுதாததைப் போல்

நான் ஏன் நல்லவனில்லை என்பதற்கு மூன்று காரணங்கள்

1 நான் கவிதை எழுதுகிறேன்

2 அதை கிழிக்காமலிருக்கிறேன்

3 உங்களிடம் அதைப் படிக்கக் கொடுக்கிறேன்...

-நா முத்துக்குமார்

"எல்லாம் எழுதிய பிறகும் ஏதும் எழுதாததைப் போல் தோன்றுகிறது . இதுதான் வாழ்க்கைபோலும்"

#HBDmuthukumar

வியர்வை தரும் வாசம்

மழை வாசம் வருகின்ற

நேரமெல்லாம்

உன் வியர்வை தரும் வாசம்

வருமல்லவா!!!

நான் கேட்கும் அழகான சங்கீதங்கள்

நீ எந்தன் பெயர் சொல்லும் பொழுதல்லவா!!!

#HBDNaMuthukumar

#நாமுத்துக்குமார்

அழியாத சோகம்

அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய் அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்!!

வரிகள் தந்த வலிகள்!! நா.முத்துக்குமார் பிறந்தநாள்

நிழல் கூட தொடர்வதில்லை

இருட்டினிலே நீ நடக்கையிலே

உன் நிழலும் கூட

உன்னை தொடர்வதில்லை

#HBDNaMuthukumar

#நாமுத்துக்குமார்

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Late poet Na Muthukumar's 43rd birthday celebrates today. Netizens tribute Na Muthukumar for his birthday on Social media.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X