For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு ‘இடைக்கால' கூடுதல் பொறுப்பு இதற்குதானாம்!

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் குடிநீர் வடிகால் வாரியம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

By Raj
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகுவுக்கு திடீரென மீண்டும் சென்னை குடிநீர் வாரியம் கொடுக்கப்பட்டது எதற்காக என்பது குறித்துதான் கோட்டை வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தேர்தல் அதிகாரியாக ஒருவர் நியமிக்கப்பட்டுவிட்டாலே தலைமை தேர்தல் ஆணையத்தின் கீழ் அவர் வந்துவிடுவார். ஆனால் கோட்டையில் கடந்த வாரம் அதிகாரிகளுக்கு அதிர்ச்சிதான் கிடைத்திருக்கிறது.

New Controversy over TN Chief Electoral Officer Satyabrata Sahoo

அண்மையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட சத்யபிரதாசாகுதான் திடீரென சென்னை குடிநீர் வடிகால் வாரியப் பொறுப்பை மீண்டும் ஏற்றிருக்கிறார். தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டது முதல் சத்யபிரதாசாகு பதவி வகித்த குடிநீர் வாரிய இயக்குநர் பதவி காலியாகத்தான் இருந்தது.

தற்போது எங்கும் நடக்காத விசித்திரமாக தேர்தல் அதிகாரிக்கு கூடுதல் பொறுப்பாக மாநிலப் பொறுப்பு கொடுத்துள்ளது தமிழக அரசு. இது குறித்து கோட்டை வட்டாரங்களில் விசாரித்த போது, குடிநீர் வாரிய ஒப்பந்தங்களை புதிய அதிகாரி ஒருவரிடம் கொடுத்து மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதற்கு பதில் சத்யபிரதாசாகுவே பெஸ்ட் சாய்ஸ் என முடிவெடுத்ததாம் கோட்டை.

அதனால்தான் 'சில பணிகள்' முடிக்க வேண்டியது இருப்பதால் 'இடைக்கால' கூடுதல் பொறுப்பாக மட்டும் குடிநீர் வாரியத்தை சத்யபிரதாசாகு பார்ப்பார் என 'முன்ஜாக்கிரதை'யுடன் தேர்தல் ஆணையத்துக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறதாம். இந்த விவகாரம்தான் கோட்டையில் ஹாட் டாபிக்

English summary
According to the sources, TamilNadu Chief Electoral Officer Satyabrata Sahoo again take in-charge as Managing Director of the Chennai Metropolitan Water Supply and Sewerage Board,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X